azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 19 Sep 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 19 Sep 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Lord Vinayaka is the leader of all, He has no leaders or master. Whenever a new task is undertaken, it is customary to invoke Lord Vinayaka’s blessings for the successful completion of the task. When you pray to Him and seek His blessings, all your efforts will meet with success. Lord Vinayaka’s elephant-head denotes that He can be compared to an elephant in intelligence, which always thinks twice before setting its foot forward. Lord Vinayaka is full of wisdom. The name Ganapati denotes that He is full of vijnana (higher wisdom), sujnana (discriminatory wisdom), and prajnana (constant integrated awareness). People today forget the underlying meaning in the name Ganapati and engage themselves in mere rituals. You may not perform any rituals, but never give up worshipping Lord Vinayaka.(Divine Discourse, Sep 18, 2004.)
Transform work into worship, and worship into wisdom. - Baba
விநாயக பகவான் அனைவருக்கும் அதிபதி. அவருக்கு மேல் ஒரு தலைவரோ , அல்லது எஜமானரோ கிடையாது. எப்போதெல்லாம் ஒரு புதிய காரியம் தொடங்கப் படுகிறதோ, அது வெற்றிகரமாக முடிவதற்காக விநாயகரின் ஆசிகளை நாடுவது வழக்கம்.நீங்கள் எப்போது அவரை வழிபட்டு, அவரது ஆசிகளை வேண்டுகிறீர்களோ,உங்களது அனைத்து முயற்சிகளும் வெற்றி அளிக்கும். விநாயகரது யானைத் தலை, புத்தியில் ,தான் அடுத்த அடி வைப்பதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறையாக ஆலோசிக்கும் யானைக்கு ஒப்பிடலாம், என்பதை சுட்டிக் காட்டுகிறது. விநாயக பகவான் ஞானம் நிறைந்தவர். '' கணபதி '' என்ற நாமம், அவர் உயர் அறிவு ( விஞ்ஞானா), பகுத்தறிவு ( சுக்ஞானா ), மேலும் நிலையான ஒருமித்த ஆத்ம ஞானம் ( ப்ரக்ஞானா ) நிறைந்தவர் என்பதை சுட்டிக் காட்டுகிறது. இன்று மக்கள் '' கணபதி '' என்ற நாமத்தின் அடிப்படைப் பொருளை அறியாது, வெறும் சடங்குகளில் மட்டும் ஈடுபடுகின்றனர். நீங்கள் எந்த சடங்குகளைச் செய்யாவிட்டாலும் , விநாயக பகவானை வழிபடுவதை மட்டும் ஒருபோதும் கைவிடாதீர்கள்.
செயல்களை வழிபாடாகவும், வழிபாட்டை ஞானமாகவும் மாற்றுங்கள் - பாபா