azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 07 Sep 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 07 Sep 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

You are on a journey through the stream of life from one act to another – it is one continuous activity, marked by karma all throughout. It would be a pity, if you do not know the right technique of performing karma (actions). Just as the fruit on a tree depends upon the seed, the soil, the manure, the tending of the gardener and the fence, the results of your actions too reflect a variety of factors, such as the tendencies and consequences of the activities in previous lives. A potter makes pots and pans from the clay in the earth and so it is called mrinmaya (material and ephemeral). But you are Chinmaya (spiritual and transcendental) for Brahma, the Divine Potter, has made you from Truth (Sath), Consciousness (Chith) and Bliss (Ananda). Understand this difference, and shape your actions. Act in accordance with what you profess to be; that is the real Dharma (righteousness).(Divine Discourse, Sep 29 1965.)
If you want to enjoy life, fill yourself with good thoughts. - Baba
வாழ்க்கை எனும் நீரோட்டத்தின் மூலம் நீங்கள் ஒரு செயலிலிருந்து மற்றொன்றிற்கு பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். இது இடையறாத முழுமையாக கர்மாவைக் கொண்ட செயலாக்கமே.செயலாற்றுவதற்கான ( கர்மா) சரியான உத்தி உங்களுக்குத் தெரியாதிருந்தால் அது துரதிருஷ்டமே.எவ்வாறு ஒரு பழத்தின் தன்மை விதை, மண், உரம், தோட்டக்காரரின் பாரமரிப்பு மற்றும் வேலி ஆகியவற்றைப் பொறுத்து இருக்கிறதோ, அதே போல உங்களது செயல்களின் பலன்கள் கூட, முற்பிறவிகளில் உங்களது வாஸனைகள் மற்றும் செயல்களின் விளைவுகள் போன்ற பல அம்சங்களைப் பிரதிபலிக்கின்றன. ஒரு குயவன் நிலத்தில் உள்ள களிமண்ணைக் கொண்டு, ''ம்ருண்மய'' எனப்படும் உலகியலான நிலையற்ற பானைகளையும் தட்டுகளையும் படைக்கிறான். ஆனால் , தெய்வீகக் குயவனாகிய ப்ரம்மாவிற்கு நீங்கள் '' சின்மயம்'' எனப்படும் அனைத்தையும் கடந்த,ஆன்மீகமானவர்கள்; உங்களை அவர் 'ஸத்',' சித்' மற்றும் 'ஆனந்தம்'' ஆகியவற்றிலிருந்து படைத்துள்ளார்.இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொண்டு, உங்களது செயல்களை உருவாக்குங்கள். நீங்கள் உங்களை யார் என்று பறை சாற்றிக் கொள்கிறீர்களோ,அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ளுங்கள்;அதுவே உண்மையான தர்மம்.
நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என விரும்பினால், உங்களை நல்ல எண்ணங்களால் நிரப்புக் கொள்ளுங்கள் - பாபா