azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 06 Sep 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 06 Sep 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Earning wealth is one of the legitimate objectives of human endeavour, without a doubt. It is one of the four objectives (purusharthaas) of every human life, the four being - righteousness, earning wealth, desire and liberation. The order they are mentioned in, has a purpose too. Righteousness has to direct and control the process of earning wealth and liberation has to be the regulating factor for one’s desires. All wealth accruing through unrighteous means is to be treated with contempt as unworthy. All desires that do not subserve the one supreme need for liberation are to be given up as beneath one’s dignity. So the spiritual basis of righteousness and liberation must be the root of both the pursuit of wealth and fulfilment of other desires.(Divine Discourse, Jul 14, 1966.)
Your good conduct is your true wealth. - Baba
செல்வத்தை ஈட்டுவது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி மனித முயற்சிகளில் நியாயமான ஒன்றே. ஒவ்வொரு மனித வாழ்க்கையின் நான்கு குறிக்கோள்களில்( புருஷார்த்தங்கள் ) அதுவும் ஒன்றே- தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கே அவை. அவை சொல்லப் பட்டுள்ள வரிசைக்கும் ஒரு நோக்கம் உள்ளது. தர்மமே,செல்வத்தை ஈட்டும் முறையை வழி நடத்தி கட்டுப்படுத்த வேண்டும்; மோக்ஷம் அடைவதே ஒருவரது ஆசைகளின் ( காமம்) முறைப்படுத்தும் அம்சமாக இருத்தல் வேண்டும். அதர்மமான முறையில் சேரும் அனைத்து செல்வமும், தகாதவை என வெறுத்து ஒதுக்கப் பட வேண்டும். தலை சிறந்த தேவையான மோக்ஷத்திற்கு உதவாத அனைத்து ஆசைகளும் ஒருவரது கண்ணியத்திற்குக் குறைவானவை என விட்டு விடப் படவேண்டும். எனவே, செல்வத்தை ஈட்டுவது (அர்த்தம்) மற்றும் ஆசைகளை பூர்த்தி செய்வது ( காமம் ) என்ற இரண்டின் ஆன்மீக வேர், தர்மம் மற்றும் மோக்ஷமாக இருக்க வேண்டும்.
உங்களது நன்னடத்தையே,உங்களது உண்மையான செல்வம் - பாபா