azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 05 Sep 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 05 Sep 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Teachers should try to impart the finest education at minimum cost and make children lead pure and noble lives. Without being bound by considerations of hours of work, teachers must when necessary, be prepared to put in extra hours to remove the doubts of students and help them to complete their assignments. Teachers, this is your duty. Holding fast to Truth, you must make Righteousness, Peace, Love and Nonviolence, the guideposts for your life, at all times. You should not limit yourself to imparting the five human values alone. You must also create the environment which will be conducive to the practice of these basic values. When you have dedication and devotion, you will be able to face all the challenges in the discharge of your duties. If teachers play their role properly, they have the power to transform the entire nation.(Divine Discourse, Mar 9 1986.)
A good student is an offering that a good teacher makes to the nation. - Baba
ஆசிரியர்கள் மிகச் சிறந்த கல்வியை, மிகக் குறைந்த செலவில் அளித்து, குழந்தைகள் தூய்மையான மற்றும் சீரிய வாழ்க்கை நடத்துமாறு செய்ய வேண்டும். நேரம் காலம் பாராது,தேவைப் படும் போது, ஆசிரியர்கள் மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதில் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டு, அவர்கள் தங்கள் பயிற்சிகளை முடிப்பதற்கு உதவ வேண்டும். ஆசிரியர்களே இது உங்களது கடமை. சத்தியத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டு,தர்மம்,சாந்தி,ப்ரேமை மற்றும் அஹிம்சை ஆகியவற்றை எல்லாக் காலங்களிலும் உங்களது வாழ்க்கையின் வழிகாட்டிகளாகக் கொள்ள வேண்டும். இந்த ஐந்து மனிதப் பண்புகளை கற்றுத் தருவதோடு மட்டும் நீங்கள் நின்று விடக் கூடாது. இவற்றை நடைமுறைப் படுத்துவதற்கு ஏற்ற சூழ்நிலையையும் நீங்கள் உருவாக்கித் தர வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வும் பக்தியும் உங்களுக்கு இருக்கும் போது,உங்களது கடமைகளை ஆற்றும் போது வரும் சவால்களை உங்களால் எதிர் கொள்ள முடியும். ஆசிரியர்கள் தங்களது பங்கை சரிவர ஆற்றினால்,நாடு முழுவதையும் மாற்றுவதற்கான திறன் அவர்களுக்குக் கிடைக்கும்.
ஒரு நல்ல மாணவன்,ஒரு ஆசிரியர் நாட்டிற்கு அளிக்கும் நிவேதனமாகும் - பாபா