azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 04 Sep 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 04 Sep 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

How can you serve the Lord in others, when the senses drag you away from that service? How can you serve when passions peep in, to tarnish the love that inspires that service? Letting one’s senses have their way, by directing them on the objective world of tastes, smells, shapes, melodies and softnesses is to fall into a bottomless pit. The Lord of the World is engaged in spreading ananda (bliss) in this world; you too should be engaged in this noble task of spreading ananda around. The control and the sublimation of the senses is the most important and essential thing for this.(Divine Discourse, July 3 1966.)
When you do not fill your heart with love, many evil qualities will find their way into it and destroy your very humanness. - Baba
எப்போது புலன்கள் இந்த சேவையிலிருந்து உங்களைப் பிரித்து இழுத்துச் செல்லுகின்றனவோ, அப்போது பிறருள் உறையும் இறைவனுக்கு நீங்கள் எவ்வாறு சேவை செய்ய முடியும்? எப்போது இந்த சேவையை ஆற்றத் தூண்டும் அன்பினை களங்கப் படுத்த , மனக் கிளர்ச்சிகள் உள்ளே எட்டிப் பார்க்கின்றனவோ, உங்களால் எவ்வாறு சேவை ஆற்ற முடியும்? உலகியலான சுவைகள், வாசனைகள், உருவங்கள், கீதங்கள் மேலும் மிருதுவானவைகள் ஆகியவற்றை நோக்கி,அவைகளின் போக்கில், புலன்களை விட்டு விடுவது என்பது அதல பாதாளத்தில் விழுவதற்கு ஒப்பானது. இந்த உலகின் தலைவனான இறைவன், ஆனந்தத்தை உலகில் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளான்; நீங்களும் இந்த சீரிய பணியாகிய ஆனந்தத்தைப் பரப்புவதில் ஈடுபட வேண்டும். புலன்களைக் கட்டுப் படுத்தி ,அவற்றின் நிலையை மேம்படச் செய்வது, இதற்கான மிகவும் முக்கியமான மேலும் இன்றியமையாத ஒன்றாகும்.
நீங்கள் எப்போது உங்கள் இதயத்தை அன்பால் நிரப்பிக் கொள்ளவில்லையோ,பல தீய குணங்கள் உட்புகுந்து உங்களது மனிதத் தன்மையையே அழித்து விடும் - பாபா