azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 02 Sep 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 02 Sep 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

To tame anger and other negative emotions is a hard and slow process, which requires patience, persistence and time. There was once a huge wrestler who was strutting along a street, proud of his physical strength and victory over many rivals. As he passed by, an innocent middle aged woman laughed at his stature. The wrestler observed this, gnashed his teeth in anger and was about to pounce on her. The woman retorted, “How can you consider yourself strong when you cannot even take a woman’s laughter calmly?” The wrestler, in a split second, realized his folly and hung his head in shame. Forbearance (Sahana) is the best spiritual practice (Sadhana). Practice forbearance and fortitude - this is the foremost and greatest lesson from the scriptures.(Divine Discourse, July 3, 1966)
Love, Forbearance, Kindness and Compassion are the essential qualities for spiritual transformation. - Baba
கோபம் மற்றும் பிற எதிர்மறையான உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது என்பது கடினமான மற்றும் மெதுவான செயல்பாடாகும்;இதற்கு பொறுமை, விடாமுயற்சி மற்றும் காலம் ஆகியவை தேவை. ஒருமுறை ஒரு மிகப் பெரிய மல்யுத்த வீரன் ஒரு வீதி வழியாக தனது உடல் வலிமை மற்றும் தனது எதிரிகளின் மீது பெற்ற வெற்றிகளைப் பற்றிய பெருமையுடன் கர்வமாக நடந்து சென்று கொண்டிருந்தான்.அவன் கடந்து செல்லும் போது,ஒரு வெகுளியான நடுத்தர வயது பெண்மணி அவனது நிலையையைக் கண்டு சிரித்து விட்டாள். இதைக் கண்ட அந்த மல்யுத்த வீரன் கோபத்தில் தனது பற்களைக் கடித்துக் கொண்டு,அவள் மீது பாய இருந்தான். அந்தப் பெண்மணி,'' ஒரு பெண்ணின் சிரிப்பைக் கூட எளிதாக எடுத்துக் கொள்ள முடியாத நீ,உன்னை எப்படி ஒரு பலசாலி எனக் கருத முடியும் ?'' எனக் கேட்டாள். ஒரு விநாடியில், தனது தவறை உணர்ந்த அந்த மல்யுத்த வீரன் வெட்கத்தால் தலை குனிந்தான். பொறுமையே மிகச் சிறந்த ஆன்மீக சாதனையாகும். பொறுமை மற்றும் சகிப்புத் தன்மையைக் கடைப் பிடியுங்கள்- இதுவே வேதங்களின் மிகச் சிறந்த மற்றும் தலையாய போதனையாகும்.
அன்பு,பொறுமை,கனிவு மற்றும் கருணை ஆகியவையே ஆன்மீக மாற்றத்திற்கான இன்றிமையாத குணங்கள் - பாபா