azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 01 Sep 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 01 Sep 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The spiritual aspirant is given to wonder which one is better or true - the Saguna (with form) aspect or the Nirguna (formless) aspect of God. Understand that they are like ice and water. Though water is formless, it takes the form of the vessel which contains it. Water and ice are one and the same. Similarly there is no difference between the two forms of worship. In the spiritual journey, Saguna and Nirguna meditation are like the right and left feet. When you worship a form of the Lord, bear in mind the underlying formless aspect. Remember that God’s Glory can never be contained through words or forms of worship. Similarly, during the Nirguna meditation, do not lose faith or diminish the majesty or glory that the Form carries. The final step, however, must be the auspicious right foot, the Nirguna aspect.(Divine Discourse, Sep 28, 1965.)
To worship God as immanent in every atom or cell in the body is the
highest form of worship - Baba
ஆன்மீக சாதகனுக்கு, இறைவனது ''ஸகுண'' (உருவமுள்ள),'' நிர்குண '' ( உருவமற்ற அல்லது அரூபமான) தன்மைகளில், எது உண்மையானது அல்லது சிறந்தது என்ற வியப்பு தோன்றுகிறது. அந்த இரண்டுமே தண்ணீர் மற்றும் பனிக்கட்டி போன்றவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தண்ணீருக்கு ரூபம் இல்லாவிட்டாலும், அது இருக்கும் பாத்திரத்தின் ரூபத்தை ஏற்றுக் கொள்கிறது. தண்ணீரும் பனிக்கட்டியும் ஒன்றே. அதைப் போலவே இந்த இரண்டு விதமான வழிபாடுகளிலும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆன்மீகப் பயணத்தில் , ''ஸகுண'' மற்றும்'' நிர்குண ''தியானங்கள் வலது மற்றும் இடது பாதங்களைப் போன்றவை. இறைவனது ஒரு ரூபத்தை வழிபடும்போது, அதன் அடிப்படையில் உள்ள உருவமற்ற தன்மையை மனதில் கொள்ளுங்கள். இறைவனது மஹிமையை வார்த்தைகள் அல்லது வழிபாடுகளின் மூலம் ஒருபோதும் வரையறுக்க முடியாது என்பது நினைவிருக்கட்டும். அதைப் போலவே, '' நிர்குண '' தியானத்தின் போது, அது ஏற்றுள்ள இறைவனது ரூபத்தின் மேன்மை மற்றும் மஹிமையைக் குறைக்கவோ அல்லது அதன் மீது கொண்ட நம்பிக்கையை இழக்கவோ செய்யாதீர்கள். எப்படியானாலும், இறுதிக் காலடி மங்களகரமான வலது பாதமான '' நிர்குண ''த் தன்மையினுடையதாகவே இருக்க வேண்டும்.
உடலில் ஒவ்வொரு அணு மற்றும் செல்லிலும் இறைவன் உறைவதாக வழிபடுவதே மிக உயர்ந்த வழிபாடாகும் - பாபா