azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 22 Aug 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 22 Aug 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

A boat may be a small appliance, but it can take you across the river. A lamp may be a tiny device, but it can light your path across a jungle. A torch may illumine only a distance of two yards, and you may have to go two miles. Do not despair. What is required is your persistent effort! Hold the torch in your hand and walk on. With every step, the torch will illumine a few steps more and you can safely cross the two miles. But you must walk, without sitting idle by the roadside. Make the effort, move from one stage to another listening to God’s Glory, recapitulate His sweet messages and concentrate on Him. Let your every act be saturated with devotion. Devotion should not be something that adds spice to your life – it truly must be the very breath of your life. Devotion should inspire your every act, thought and word.(Sathya Sai Speaks, Vol 6, Chap 15.)
One who is nourished by the nectar of devotion will have no desire for anything else. - Baba
ஒரு படகு சிறிய சாதனமாக இருக்கலாம் , ஆனால், உங்களை ஒரு நதி மீது எடுத்துச் செல்ல அதனால் இயலும். ஒரு விளக்கு மிகச் சிறிய ஒன்றாக இருந்தாலும்,ஒரு காட்டில் உங்கள் பாதையில் ஒளி காட்ட அதனால் முடியும். ஒரு டார்ச் இரண்டு கஜ தூரமே ஒளி அளிக்கலாம், ஆனால் நீங்களோ இரண்டு மைல்கள் கடக்க வேண்டும். கவலைப் பட வேண்டாம். இங்கு தேவை உங்களது விடா முயற்சியே! கையில் டார்ச்சை ஏந்திக் கொண்டு முன் செல்லுங்கள். ஒவ்வொரு அடியிலும், மேலும் அடுத்த சில அடிகளுக்கு அந்த டார்ச் வெளிச்சம் தரும்; இப்படியே நீங்கள் பத்திரமாக இரண்டு மைல்களைக் கடந்து விடலாம். ஆனால், பாதை ஓரத்தில் உட்காரந்திருக்காமல்,நீங்கள் நடந்தாக வேண்டும். முயற்சி செய்யுங்கள்,ஒரு கட்டத்திலிருந்து மற்றொன்றிற்கு இறைவனது பெருமைகளைக் கேட்டுக் கொண்டும்,அவனது இனிய அறிவுரைகளை நினைவு கூர்ந்தும், அவனைத் தியானித்துக் கொண்டும் முன்னேறுங்கள். உங்களது ஒவ்வொரு செயலும் பக்தியில் தோய்ந்திருக்கட்டும். பக்தி என்பது உங்களது வாழ்க்கைக்குச் சுவை ஊட்டும் ஒரு பொருளாக மட்டும் இருக்கக் கூடாது;அது உங்களது வாழ்க்கையின் உயிர் மூச்சாக இருக்க வேண்டும். பக்தி உங்களது ஒவ்வொரு எண்ணம்,சொல் மற்றும் செயலை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும்.
பக்தி எனும் அமிர்தத்தால் செருவூட்டப்பட்ட ஒருவருக்கு, வேறு எந்தப் பொருளின் மீதும் ஆசை இருக்காது - பாபா