azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 20 Aug 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 20 Aug 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Housing, clothing and food gives physical comfort and happiness. Education, development of skills, and knowledge about the world gives a means for livelihood. However the ancient adage says that real and lasting happiness cannot be won by physical happiness (“Na Sukhaat labhathe sukham”). Lasting happiness – happiness that will not be shaken, diminished or modified by changing wheels of fortune can only come by the discipline of the mind, and faith in a Higher Power. The lamp of spiritual awareness has to be lit and fed continuously, so that one’s footsteps can take that path and proceed unharmed to that state of true happiness.(Sathya Sai Speaks, Vol 6, Ch 13)
Every true human being has the noble qualities of adherence to truth, duty, devotion and discipline. - Baba
உறைவிடம்,உடுப்பு மற்றும் உணவு ஆகியவை உடல் அளவிலான சௌகரியத்தையும், சந்தோஷத்தையும் அளிக்கின்றன. கல்வி,திறன்களை வளர்த்துக் கொள்ளுதல், உலககத்தைப் பற்றிய அறிவு ஆகியவை வாழ்க்கை நடத்துவதற்கான வழிகளை அளிக்கின்றன. ஆனால் பண்டைய பழமொழி, நிலையான சுகம்,உடல் சுகத்தினால் கிட்டாது ( ந ஸுகாத் லபதே ஸுகம்) என்கிறது -நிலையான சுகம் - நிலைகுலையாத,குறையாத, அதிர்ஷ்ட சக்கரத்தின் சுழல்களால் மாறாத சுகம், மனக்கட்டுப்பாடு மற்றும் உயர்ந்த சக்தியின் ( இறைவன்) மீது கொள்ளும் நம்பிக்கை ஆகியவற்றால் மட்டுமே வர முடியும். ஆன்மீக உணர்வின் விளக்கை ஏற்றி,அதற்குத் தொடர்ந்து செருவூட்டுவதன் மூலம், ஒருவர் அந்தப் பாதையில் நடந்து சென்று, எந்த பாதிப்பும் இன்றி அந்த உண்மையான சந்தோஷம் என்ற நிலையை அடைய முடியும்.
உண்மையான மனிதர் ஒவ்வொருவருக்கும் சத்யம்,கடமை,பக்தி மற்றும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும் சீரிய குணங்கள் உள்ளன- பாபா