azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 18 Aug 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 18 Aug 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Humans are the most devalued entities today; everything else has steeply risen in value. People consider themselves cheap as they do not know their own greatness or worth. For they fritter away their time in paltry activities and petty pleasures, lowering their self-respect and injuring their physical and mental calibre. They do not know the alchemy by which every failure or disappointment can be transmuted into a golden chance for self-surrender and for building up the bulwark of devotion. Learn how to elevate the smallest act of yours into a means of realising the Grace of the Lord. The scriptures declare that this can be achieved by worshipping the lord by dedicating one's duties to Him.(Sathya Sai Speaks, Vol 6, Ch 13.)
The person devoted to God knows no failure. The name of the Lord, if taken sincerely overcomes all obstacles. - Baba
மனிதர்கள் மட்டுமே இன்று மதிப்பில் தாழ்ந்து விட்டார்கள்;வேறு ஒவ்வொன்றும் மதிப்பில் மிக அதிகமாகி விட்டன. மனிதர்கள், தங்களது மேன்மை மற்றும் மதிப்பை அறியாததால், தங்களை மலிவானவர்களாகக் கருதுகின்றனர். ஏனெனில்,அவர்கள் தங்களது நேரத்தை அற்பமான செயல்களிலும், சிற்றின்பங்களிலும் செலவிட்டு, தங்களது சுய கௌரவத்தைத் தாழ்த்திக் கொண்டு தங்களது உடல் மற்றும் மனத்திறன்களை பாழ்படுத்திக் கொள்கின்றனர். தங்களது ஒவ்வொரு தோல்வி மற்றும் ஏமாற்றத்தை எவ்வாறு ஆத்ம நிவேதனம் செய்வதற்கும், பக்தி எனும் அரண்களை கட்டுவதற்கும் ஆன அரிய வாய்ப்பாக மாற்றிக் கொள்ளும் வழி வகையை அறியாதவர்களாக இருக்கிறார்கள். உங்களது மிகச் சிறிய செயலையும் எவ்வாறு இறை அருளைப் பெறுவதற்கான வழியாக உயர்த்த முடியும் என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள். ஒருவரது கடமைகள் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து வழிபடுவதன் மூலம் இதை அடைய முடியும் என வேதங்கள் பறை சாற்றுகின்றன.
இறை பக்தி கொண்டவர் தோல்வி அறியார்.இறை நாமத்தை உளமார ஏற்றுக் கொள்வது அனைத்துத் தடைகளையும் முறியடிக்கும் - பாபா