azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 15 Aug 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 15 Aug 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

From the most ancient times Bharatiyas (Indians) considered Truth as God, loved it, fostered it and protected it and thereby achieved Divinity. They were devoted to Truth, wedded to Dharma (Righteousness) and regarded morality in society as their foremost duty. Today because people have forgotten Truth and Righteousness they are unable to solve national problems or end communal differences. We have the Bay of Bengal in the east and the Arabian Sea in the west and both merge in the Indian Ocean. Likewise, Bharat exemplifies the combination of worldly prosperity and spiritual progress. Bharat is the country, where the unity of the Jiva (the individual Spirit) and the Brahmam (the Cosmic Spirit) was established. Remember the term Bharat does not relate to any particular individual or country. True Bharatiyas are those who take delight in Self-knowledge. Hence anyone who shines by their own self-luminous power is a Bharatiya.(Divine Discourse, Nov 23 1990.)
Only in the nation in which the goddess of Dharma (Righteousness) and Santhi (Peace) are adored will genuine prosperity and happiness exist. - Baba
பண்டைய காலத்திலிருந்தே, பாரதீயர்கள் சத்தியத்தை இறைவனாகக் கொண்டு,அதை நேசித்து, பேணிப் பாதுகாத்தார்கள்;அதனால் தெய்வீகத்தையும் அடைந்தார்கள். அவர்கள் சத்தியத்தைப் போற்றி, தர்ம வழியில் நடந்து,சமுதாயத்தில் ஒழுக்கத்துடன் இருப்பதை தங்களது தலையாய கடமையாகக் கருதினார்கள். இன்று மக்கள் சத்தியத்தையும் , தர்மத்தையும் மறந்து விட்டதனால், நாட்டின் பிரச்சனைகளைத் தீர்க்கவும் முடியவில்லை அல்லது மத பேதங்களை முடிவுக்குக் கொண்டு வரவும் முடியவில்லை. நமக்குக் கிழக்கில் வங்காள விரிகுடாவும் ,மேற்கில் அரபிக் கடலும் உள்ளன;அவை இரண்டும் இந்து மஹா சமுத்திரத்தில் கலக்கின்றன. அதைப் போலவே,பாரதம் உலகியலான செல்வமும், ஆன்மீக முன்னேற்றமும் இணைந்து இருப்பதற்கான உதாரணமாகத் திகழ்கிறது. ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றே என நிலை நாட்டப்பட்டது பாரத தேசத்தில் தான். '' பாரத்'' என்ற சொல் ஒரு குறிப்பிட்ட நபரையோ அல்லது தேசத்தையோ சார்ந்தது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆத்ம ஞானத்தில் திளைத்திருப்பவரே உண்மையான பாரதீயர்கள் . எனவே தனது ஆத்ம ஜோதியால் பிரகாசிக்கும் எவரும் பாரதீயரே.
தர்ம மற்றும் சாந்தி தேவதைகள் எந்த நாட்டில் போற்றப் படுகின்றனரோ, அங்கு தான் உண்மையான வளமையும் ,ஆனந்தமும் இருக்கும் - பாபா