azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 13 Aug 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 13 Aug 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Schooling is not merely for food and delight, for earning a living and to enjoy leisure. Its true purpose should be to activate the qualities of wisdom in action, non-attachment and discriminatory power (Viveka, Vairaagya and Vichakshana). The root is education and the fruit should be virtues. Every school must shape its students into citizens, worthy of the country’s precious heritage and spiritual wealth. Otherwise, all schooling is a waste of time and money. Schools are the temples of the Goddess of Wisdom who grants to each child the wisdom to grasp the Ultimate Truth and acquire knowledge that will dispel ignorance for ever. The school must facilitate this and ensure stability in all the students to practice the virtues of Truth, Righteousness and Peace, through the blossoming of Love.(Divine Discourse, Apr 18, 1966.)
When one feels that he knows everything and is unwilling to learn from elders he becomes unfit for undertaking the spiritual quest. - Baba
கல்வி வெறும் உணவு மற்றும் கேளிக்கைக்காகவோ, வாழ்க்கை நடத்தி ஓய்வு நேரத்தை அனுபவிப்பதற்காகவோ மட்டும் அல்ல.அதன் உண்மையான நோக்கம், விவேகம், வைராக்யம் மற்றும் பகுத்தறிவு போன்ற குணங்களை முடுக்கி விடுவதுதான். கல்வி வேராகவும் ,நற்குணங்களே பழங்களாக இருக்க வேண்டும்.ஒவ்வொரு பள்ளியும் அதன் மாணவர்களை, நாட்டின் விலைமதிப்பற்ற பாரம்பர்யம் மற்றும் ஆன்மீகச் செல்வத்திற்குத் தகுதியான குடிமகன்களாக உருவாக்க வேண்டும். இல்லை எனில், பள்ளிப் படிப்பு அனைத்தும், பணம் மற்றும் நேரத்தை வீணடிப்பதாகும். பள்ளிகள், ஒவ்வொரு குழந்தைக்கும் மாறாத சத்தியத்தை உணர்வதற்கான ஞானத்தை அளித்து, அறியாமையை நிரந்தரமாக நீக்கும் கல்வியைப் பெற வைக்கும் மாதா சரஸ்வதியின் கோவில்களாகும். பள்ளிகள் இதற்கு வழி வகுத்து , அன்பை பரிமளிக்கச் செய்வதன் மூலம், எல்லா மாணவர்களும் சத்யம்,தர்மம் மற்றும் சாந்தியைக் கடைப்பிடிப்பதில் ஸ்திரத்தன்மை கொண்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
எப்போது ஒருவன் தனக்கு அனைத்தும் தெரியும் என்று கருதி,பெரியோர்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு மறுக்கிறானோ, ஆன்மீகத் தேடலுக்கு அருகதை அற்றவனாகிறான் - பாபா