azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 09 Aug 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 09 Aug 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The Universe is saturated with Divinity; there is nothing here which is not Divine. Always remember that God is the Base as well as the Superstructure, the inner motive and the outer movement. The body is the temple of the Lord; the atmosphere of this temple is by its very nature filled with love for all beings. The scriptures clearly declare that this understanding can be achieved through performing one’s duty, and then worshipping the Lord by dedicating to Him this duty. One’s intelligence is cleared of the dust of doubt and delusion, through dutifulness and dedication.(Sathya Sai Speaks, Vol 6,) Ch 13.
The body should be regarded primarily as an instrument for the realisation of the Divine through the nine forms of devotion. - Baba
இந்த பிரபஞ்சம் தெய்வீகத்தால் நிரம்பியது; தெய்வீகம் அற்ற எதுவும் இதில் கிடையாது. இறைவனே அஸ்திவாரமும், மேல் கட்டிடமும், உள்ளார்ந்து உந்துபவனும் மேலும் வெளிப்படையாக செயலாற்றுபவனும் ஆவான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.இந்த உடல் இறைவன் உறையும் ஆலயம்;இதன் சூழ்நிலை அதன் இயல்பிலேயே எல்லா ஜீவராசிகளின் மீதும் உள்ள அன்பால் நிறைந்த ஒன்று. ஒருவர் தனது கடமைகளை சரிவர ஆற்றி, அவற்றை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து அவனை வழிபடுவதன் மூலம், இந்த உணர்வைப் பெற முடியும் என வேதங்கள் தெளிவாக பறை சாற்றுகின்றன. கடமை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பின் மூலம், சந்தேகம் மற்றும் மாயையின் தூசுகள் ஒருவரது புத்தியிலிருந்து நீக்கப் படுகின்றன.
நவவித பக்தியின் மூலம் தெய்வீகத்தை உணர்வதற்கான பிரதானமான கருவியே இந்த உடல் எனக் கொள்ள வேண்டும் - பாபா