azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 02 Aug 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 02 Aug 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Steady practice will ensure you both results - freedom from sin and liberation. Never underestimate the importance and power of practice! You would have known examples of how practice makes even an animal execute difficult tasks – for example, look at the horses yoked to the carts, elephants on the battlefield! Those elephants have rendered assistance in battle which even man with the superior equipment of reason cannot do! Consider how this was made possible for docile elephants living in forests as herds? Fighting on the battlefield is not their nature. These are ample proof of the value of practice. Draw strength and confidence in the value of practice. Practice the withdrawal of the mind from the senses; it will slowly and steadily develop the skills which will release you from bondage.(Geetha Vahini, Ch 16.)
சீரான பயிற்சி உங்களுக்கு இரண்டு விதமான பலன்களை உறுதி செய்கிறது-பாவத்திலிருந்து விடுதலை மற்றும் மோக்ஷம். பயிற்சியின் முக்கியத்துவத்தையும், வலிமையையும் ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். பயிற்சி எவ்வாறு ஒரு மிருகத்தைக் கூட கடினமான பணிகளைச் செய்ய வைக்கிறது என்பதற்கான பல உதாரணங்களை நீங்கள் அறிந்திருக்கக் கூடும் - உதாரணமாக, வண்டியில் பூட்டப் பட்ட குதிரைகளையும், போர்க்களத்தில் யானைகளையும் பாருங்கள்!அந்த யானைகள், இவற்றை விட சிறந்த கருவியான பகுத்தறிவு படைத்த மனிதனால் ஆற்ற முடியாத,உதவியைக் கூட போர்க்களத்தில் ,அளித்துள்ளன. கூட்டமாகக் காட்டில் வசிக்கும் சாதுவான இந்த யானைகளால், இவ்வாறு எப்படிச் செயலாற்ற முடிந்தது என்பதை எண்ணிப் பாருங்கள். போர்க்களத்தில் சண்டை இடுவது அவற்றின் இயல்பு அல்ல. இவை அனைத்தும் பயிற்சியின் மதிப்பிற்கான போதுமான சான்றுகள். பயிற்சியின் மதிப்பிலிருந்து வலிமையையும், தன்னம்பிக்கையும் எடுத்துக் கொள்ளுங்கள். புலன்களிலிருந்து மனதை விலக்கிக் கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபடுங்கள்; இது மெதுவாகவும்,சீராகவும், பந்தங்களிலிருந்து உங்களுக்கு விடுதலை அளிப்பதற்கான திறன்களை வளர்க்கும்.