azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 01 Aug 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 01 Aug 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The character of children must be made strong and pure. Give them all the confidence and courage they need, to become good, honest and self-reliant. It is not enough if they learn to make a living - the manner of living is more important than the standard of living. Children must also be taught to have reverence towards their religion, culture and to educational attainments. Children must learn well their mother tongue, so they can appreciate the great poetical works and epics written by the seers of their land. These will give them valuable guidance during the stormy days of their life. Above all, they must develop a deep reverence for their motherland.(Divine Discourse, Apr 18 1966)
குழந்தைகளின் பண்புகள் வலிமையானதாகவும்,தூய்மையானதாகவும் ஆக்கப் பட வேண்டும். அவர்கள் நல்லவர்களாகவும், நேர்மையானவர்களாகவும், தற்சாற்பு உள்ளவர்களாகவும் உருவாவதற்குத் தேவையான எல்லாவிதமான தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுங்கள். எப்படி பிழைப்பு நடத்துவது என்பதை மட்டும் அவர்கள் கற்றுக் கொண்டால் போதாது -வாழ்க்கைத் தரத்தை விட வாழும் வகை மிகவும் முக்கியமானது. குழந்தைகளுக்கு அவர்களது மதம்,காலாசாரம் மற்றும் கல்வித் தேர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.அவர்களது நாட்டின் ஆன்றோர்கள் படைத்துள்ள சிறந்த காவியங்கள் மற்றும் கவிதைப் படைப்புகளை மதித்துப் பாராட்டுவதற்கு ஏற்றவாறு, குழந்தைகள் அவர்களது தாய்மொழியை நன்கு கற்றுக் கொள்ள வேண்டும். இவை, வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க வேண்டிய கால கட்டங்களில் விலைமதிப்பற்ற வழிகாட்டு நெறிகளை அளிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் தங்களது தாய்நாட்டின் மீது ஆழ்ந்த பெருமதிப்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.