azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 31 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 31 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

People are eager to get happiness and when there is a prospect of earning undiminishing happiness, many people jump at the idea. But soon they are tired of the effort required, and seek shortcuts. Sometimes they lean on others to carry their weight and aspire for much fruit in return for very little cultivation. Some efforts here and there, such as listening to discourses or making speeches will not be sufficient. Rigorous discipline and steady faith are absolutely necessary for success in the spiritual journey. You must control your senses, which drag your mind towards the attractions of the external world. To have steady faith, one must control the wayward mind that paints attractive pictures in false colours to lure you on from birth to birth.(Divine Discourse, Aug 19 1965.)
மனிதர்கள் சந்தோஷத்தை அடைய ஆவலாக இருக்கிறார்கள்; எப்போது குறைவே இல்லாத சந்தோஷம் கிடைக்க வாய்ப்பு உள்ளதோ,பலர் அதற்காக முண்டி அடித்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் விரைவில், இதற்குத் தேவைப்படும் முயற்சியில் அவர்கள் களைத்துப் போய்,குறுக்கு வழிகளை நாடுகிறார்கள். சில சமயம் அவர்கள் தங்களது பாரத்தைச் சுமர்ப்பதற்கு மற்றவர்களின் தோள்களை நாடி,மிகக் குறைவாக பயிர்களை நட்டுவிட்டு, அதிக அளவில் அறுவடையைப் பெற விரும்புகிறார்கள். பிரசங்கங்களைக் கேட்பது, அல்லது சொற்பொழிவுகளை ஆற்றுவது என இங்கும் அங்குமாகச் சில முயற்சிகள் செய்வது என்பது போதுமானதாகாது. ஆன்மீகப் பாதையில் கடுமையான கட்டுப்பாடும், நிலையான நம்பிக்கையும் வெற்றிக்கு அத்தியாவசியமானவை. வெளி உலகின் கவர்ச்சிகளுக்கு உங்களை இழுத்துச் செல்லும் புலன்களை நீங்கள் கட்டுப் படுத்த வேண்டும். நிலையான நம்பிக்கை இருப்பதற்கு, பல பிறவிகளில், போலி வண்ணங்களால், கவர்ச்சியான சித்திரங்களை வரைந்து உங்களை மயக்கி, அலை பாய வைக்கும் மனதைக் கட்டுப் படுத்த வேண்டும்.