azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 29 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 29 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

When you achieve Chitha Shuddhi (purity of mind), Truth will be clearly reflected therein. For this, good company is essential. Company of pious and holy people leads gradually to withdrawal from entangling activities. When a cold bit of coal is placed in the midst of glowing cinders, and when the fire is fanned, the coal too starts glowing with the fire. The Jnaana Agni or the Fire of Wisdom operates similarly. Individual effort and Divine Grace are both interdependent. Without effort, there will be no conferment of grace. To win that Grace, you only need to have faith and virtue. Knock - the doors of Grace will open. Open the door - the Sun’s rays waiting outside will flow silently in and flood the room with light.(Divine Discourse, Mar 27 1966.)
Command the mind, regulate your conduct, keep your heart straight and clear, then you will get the grace of God. - Baba
நீங்கள் மனத்தூய்மையை அடையும் போது,சத்தியம் அதில் பிரதிபலிக்கும். இதற்கு ஸத்ஸங்கம் மிகவும் இன்றியமையாதது. புனிதமான மற்றும் பக்தி கொண்ட ஆன்றோர்களது உறவு, சிக்க வைக்கும் செயல்களிலிருந்து படிப்படியாக உங்களை விடுவிக்கும். குளிர்ந்த ஒரு நிலக்கரிக் கட்டியை கொழுந்து விட்டு எறியும் கனலின் அருகில் வைத்து, நெருப்பை விசிறினால், நிலக்கரியும் நெருப்புடன் சேர்ந்து ஒளி விட்டு மிளிரும். ஞான அக்னியும் இவ்வாறே செயல் படுகிறது. தனி மனித முயற்சியும், இறைவனது அருளும் ஒன்றை ஒன்று சார்ந்ததே. முயற்சி இன்றி இறை அருளைப் பெற இயலாது. அந்த அருளைப் பெறுவதற்கு, நம்பிக்கையும். ஒழுக்கமும் உங்களுக்கு இருந்தால் போதும். தட்டுங்கள் -அருளின் கதவுகள் திறக்கும். கதவைத் திறவுங்கள் -வெளியில் காத்துக் கொண்டு இருக்கும் சூரியனின் கிரணங்கள் நிசப்தமாகப் பாய்ந்து அறையை ஒளி வெள்ளத்தில் ஆழ்த்தி விடும்.
மனதிற்கு ஆணையிட்டு, நடத்தையை சீர்படுத்தி, உங்கள் இதயத்தை நேரானாதாகவும், தெளிவாகவும் வைத்துக் கொள்ளுங்கள்; பின் இறை அருள் உங்களுக்குக் கிடைக்கும் -பாபா