azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 28 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 28 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Human beings are endowed with memory, as well as the faculty to forget. Both are useful skills. Perhaps, the power to forget is even more important – otherwise people will lament over the loss of millions of parents and kinsmen from previous births, and also the insults and injuries they suffered in this birth. Luckily the power to forget helps with all of these. People often remember only those things that have impressed them as significant – their birthdays, wedding days, their debtors, etc. Tragedy is that people forget the most critical thing about their earthly career – the key to happiness and liberation. Man cannot afford to forget the questions - “Who am I? Where am I going? Where did I come from? What is the nature and purpose of all this?”(Divine Discourse, Jul 14 1965.)
Come into the world with the question, "Who am I?" Leave it with the answer,
"God I am." - Baba
மனிதர்களுக்கு ஞாபக சக்தியும் கொடுக்கப் பட்டுள்ளது, மறக்கும் சக்தியும் கொடுக்கப் பட்டுள்ளது. இரண்டுமே பயனுள்ள திறன்கள். ஒருவிதத்தில், மறக்கும் சக்தி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது; இல்லை எனில், மனிதர்கள் தாங்கள் முந்தைய பிறவிகளில் இழந்த லக்ஷக்கணக்காண பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்காகவும், இப்பிறவியில் ஏற்பட்ட அவமானங்கள் மற்றும் துன்பங்களுக்காகவும் ஒப்பாரி வைத்துக் கொண்டு இருப்பார்கள். அதிர்ஷ்டவசமாக மறக்கும் சக்தி இவை அனைத்திலும் உதவுகிறது. மனிதர்கள் தங்களுக்கு முக்கியமானவை என்று தோன்றியவற்றை மட்டுமே- அவர்களது பிறந்த நாட்கள், திருமண நாட்கள்,அவர்களிடம் கடன் பட்டவர்கள் போன்றவை -நினைவில் வைத்துக் கொள்கிறார்கள். துயரமான விஷயம் என்னவென்றால், மனிதர்கள் அவர்களது இந்த உலக வாழ்க்கையின் மிக அத்தியாவசியமான விஷயமான,ஆனந்தம் மற்றும் மோக்ஷத்திற்கான திறவுகோலைப் பற்றி மறந்து விடுகிறார்கள். மனிதன் கீழ்க்கண்ட கேள்விகளை மறக்கவே கூடாது- '' நான் யார்? நான் எங்கே செல்கிறேன்? நான் எங்கிருந்து வந்தேன் ? இவை அனைத்தின் இயல்பும் நோக்கமும் என்ன? ''
'' நான் யார்? ' என்ற வினாவுடன் இந்த உலகத்திற்கு வாருங்கள். '' நான் இறைவனே '' என்ற விடையுடன் இதை விடுத்துச் செல்லுங்கள் - பாபா