azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 26 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 26 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Your nature is Divine; God is the very substance of which you are merely another name and form. To realize this you must develop the discrimination between the eternal and the ever changing. You must know that the Universe is constantly subject to change and modification, and that Lord alone is unchanging. Practice detachment from pleasures of this world and that of the other, being convinced that they are fraught with grief. Control the senses and the sensory promptings; exhibit fortitude in the midst of grief and pain, joy and victory. Have firm faith in the Teacher and the Sacred Texts, and on the steady contemplation on the Absolute, undisturbed by other waves of thought. You will then gain realization of your True Nature.(Divine Discourse, Jul 14, 1965.)
There is no greater example of Selfless love than Nature. - Baba
உங்களது இயல்பு தெய்வீகமே;இறைவனே உட்கருவாக இருப்பவன்,நீங்கள் அவனின் வெறும் ஒரு நாமமும் ரூபமும் மட்டுமே.இதை உணர்வதற்கு, நீங்கள், நிலையானவற்றிற்கும், மாறிக்கொண்டே இருப்பவற்றிற்கும் இடையே பகுத்தறியும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.இந்த பிரபஞ்சம் தொடர்ந்த மாற்றத்திற்கும்,திருத்தங்களுக்கும் உட்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவை துக்கத்தை விளைவிக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டு, இம்மை மற்றும் மறுமையின் சுகங்களின் மீது பற்றற்ற மனப்பாங்கைக் கடைப் பிடியுங்கள். புலன்களையும் அவற்றின் தூண்டுதல்களையும் கட்டுப் படுத்துங்கள்; துன்பம்,துயரம்,சந்தோஷம் மற்றும் வெற்றிகளுக்கு நடுவில் மனவலிமையை வெளிப்படுத்துங்கள்.குரு,புனித நூல்கள் மேலும் பரப்பரம்மத்தின் மீது ,பிற எண்ண அலைகளால் பாதிக்கப் படாத இடையறாத தியானம், ஆகியவற்றில் நிலையான நம்பிக்கை வையுங்கள். பின்னர் நீங்கள் உங்களது உண்மையான இயல்பை உணருவீர்கள்.
தன்னலமற்ற அன்பிற்கு,இயற்கையை விடச் சிறந்த உதாரணம் இல்லை- பாபா