azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 25 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 25 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The Lord is referred to as Kavi - one who is aware of the past, present and future. He knows all and sees all. It is the Lord who revolves in every heart and effects changes from step to step. He is the Motivator for the entire creation, the Prime Basis. He is the poet; His poem is all this (Kavi also means poet). He lays down the conduct for all. The five elements execute His orders. They cannot overstep the limits laid down by Him. His laws govern also the inner world of all beings as no human law can. And He is 'subtler than the subtle'; subtle not in form, He is the subtlest because He is devoid of qualities; something that you cannot fathom with the eye, the ear or the other senses. During sadhana (spiritual practices), the Lord has to be pictured as the ‘un-picturable’.( Geetha Vahini, Ch 16)
Compassion towards all beings is devotion to God. – Baba
இறைவனைக் 'கவி' என்பார்கள்-கடந்த,நிகழ் மற்றும் எதிர்காலங்களை அறிந்தவன் எனப் பொருள். அவன் அனைத்தும் அறிந்தவன்,அனைத்தையும் காண்பவன். அந்த இறைவனே ஒவ்வொரு இதயத்திலிருந்தும் வீற்றிருந்து, படிப்படியாக மாற்றங்களை ஏற்படுத்துகிறான். படைப்பனைத்திற்கும் உந்துதல் அளிப்பவனும் அவனே ;அவை அனைத்தின் அடிப்படை ஆதாரமும் அவனே. அவனே கவிஞன் ;இவை அனைத்தும் அவனது கவிதைகளே. ('' கவி'' என்றால் கவிஞன் என்ற பொருளும் உண்டு). அனைத்தின் நடத்தையையும் வகுப்பவன் அவனே. பஞ்ச பூதங்களும் அவனது ஆணைகளை நிறைவேற்றுகின்றன. அவன் வகுத்துள்ள வரம்புகளை அவை மீற இயலாது. எந்த மனித சட்டங்களாலும் இயக்க இயலாத அனைத்து ஜீவராசிகளின் உள் உலகமும், அவனது சட்டங்களால் இயக்கப் படுகின்றது. அவன் ''அணுவினும் நுண்ணியமானவன்''. நுண்ணியது என்பது உருவத்தால் அல்ல; அவன் குணங்களற்றவன் அதாவது நீங்கள் கண்,காது மற்றும் பிற புலன்களால்அளக்க இயலாத ஒன்றாவான். உங்களது ஆன்மீக சாதனைகளின் போது , இறைவனை '' உருவகப்படுத்தவே முடியாதவன்'' ஆக உருவகப் படுத்த வேண்டும்.
அனைத்து ஜீவராசிளின் மீதும் கருணை கொள்வதே பக்தியாகும் - பாபா