azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 24 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 24 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

It is the mind that weaves a pattern called “I” - the process by which it establishes the ego and elaborates it into a multitude of shackles which is called delusion. The mind prompts the senses to project into the outer world of objects, for it builds up notions of pleasure and pain, of joy and grief and constructs a whole array of urges and impulses. It resists all attempts to escape into the Eternal, Universal, and the Absolute. It protests when the individual is eager to become conscious of one’s identity. But when it finds that the individual is determined to oppose its tactics, it surrenders and disappears without a trace! Diminish your desires – you will be free from delusion. Desire comes from attachment – deliverance comes from detachment!(Divine Discourse, Mar 27, 1966)
When man is established in the experience of the One, there is no desire, for who is to desire for whom or what? - Baba
'' நான்'' என்ற வலையைப் பின்னி,அஹங்காரத்தை நிலை நிறுத்தி, அதை பல விலங்குகள் கொண்ட மாயை எனப் பெரிதாக்குவது மனமே. மனம் புலன்களை வெளி உலகப் பொருட்களை நோக்கித் தூண்டி,இன்பம்,துன்பம்,சுகம்,துக்கம் என்ற எண்ணங்களை நிலை நாட்டி, பல விதமான தூண்டுதல்கள் மற்றும் மன எழுச்சிகளை உருவாக்குகிறது. நிலையான, எங்கும் நிறைந்த பரம்பொருளினுள் செல்வதற்கான எல்லா முயற்சிகளையும் அது தடுக்கிறது.தனி மனிதர் தனது உண்மையான நிலையை உணர்வதற்கு ஆவலாக இருப்பதை அது எதிர்க்கிறது. ஆனால் ,எப்போது ஒருவர் அதனது வழிகளை எதிப்பதில் உறுதியாக இருக்கிறாரோ, அது பணிந்து,ஒரு சுவடு கூட இன்றி மறைந்து விடுகிறது! உங்களது ஆசைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள் -நீங்கள் மாயையிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்.பற்றுதலினால் மோஹம் வருகிறது- பற்றற்று இருப்பதால் மோக்ஷம் கிடைக்கிறது.
பரப்பரம்மத்தின் அனுபவத்தில் மனிதன் நிலை கொண்டு விட்டால்,ஆசைகளே இருப்பதில்லை ,ஏனெனில்,அந்நிலையில் ஆசை என்பதை எவருக்காக,எதன்மீது கொள்ள எவர் உள்ளார்?- பாபா