azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 23 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 23 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The Lord does not discriminate between the weak and the strong, or the high and the low. Such an attitude will never warp God’s vision. All are entitled to His grace; no one is invited, no one is prevented. All are entitled and welcome to enter His halls of worship. Its doors are ever open. What can anyone do if some do not approach the door? Those who desire warmth have to go near enough to the fireside and sit there. Those who stand afar can only know the light that emerges from that fireside. What do you say of that one, who, standing afar, declares that the fire has no warmth? It is inappropriate. Know that each and every one who yearns for the Lord’s presence and to enter His darbar (Court), and who strive in their minds constantly for the fruition of this desire, have admission and accommodation there.(Geetha Vahini, Ch 16.)
Come out of the well of ego into the sea of the Universal Spirit, of which you are a part. - Baba
இறைவன் பலவீனன்,பலசாலி என்றோ, உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்றோ பாகுபடுத்திப் பார்ப்பதில்லை. இப்படிப்பட்ட மனப்பாங்கு இறைவனது பார்வையை ஒருபோதும் மறைப்பதில்லை. அனைவருக்கும் அவனருளில் பங்கு உண்டு; ஒருவரும் அழைக்கப் படுவதுமில்லை,தடுக்கப்படுவதுமில்லை.அனைவருக்கும் உரிமை இருக்கிறது மேலும் அனைவரும் அவனது வழிபாட்டுத் தலங்களில் வரவேற்கப் படுகின்றனர்.அவற்றின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன. அதன் வாயிலைச் சிலர் அணுகவில்லை என்றால், எவரும் என்ன செய்ய முடியும்? வெப்பத்தை வேண்டுவோர்,நெருப்பின் அருகாமையில் சென்று அமர்ந்து தான் ஆக வேண்டும். தொலைவில் நிற்பவர்,அந்த நெருப்பில் இருந்து வெளிப்படும் ஒளியை மட்டுமே அறிய இயலும். தூரத்தில் நின்று கொண்டு, நெருப்பிற்கு வெப்பமே இல்லை என்று கூறும் ஒருவரைப் பற்றி என் சொல்வது? அது முறையற்றது. இறைவனது அருகாமைக்காகவும், அவனது தர்பாரில் நுழைய வேண்டும் எனவும் விழைந்து, அந்த விருப்பம் நிறைவேறுவதற்காக தம் மனதில் இடையறாது பாடுபடுவோருக்கு அனுமதியும் அடைக்கலமும் அங்கு உள்ளது.
அஹங்காரம் என்ற கிணற்றிலிருந்து வெளிப்பட்டு,நீங்களே அதன் அங்கமாக இருக்கும் பரமாத்மா என்ற சாகரத்தில் நுழையுங்கள் - பாபா