azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 22 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 22 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

You take great care to see that the house that you own and live in is charming, impressive and comfortable! You get angry even if a poster is pasted on its walls. Then one day, you sell it. It is no longer the object of your attachment. Even if lightning strikes it, you are not disturbed! With the money you got, you purchase some fields. Now your attachment moves to the fields. Over a period of time, you sell them and put the money in a bank. Now, your attachment grows towards the bank account. Now what exactly is yours and what are you attached to? It is not the house, fields, or money; it is prestige, comfort, show, greed – things that arose in your mind as desires! Truly it is your ego that you are attached to. Each of you must take up some spiritual effort in order to cleanse the mind of lust and greed, of envy and hate.(Divine Discourse, Mar 27, 1966.)
நீங்கள் வசிக்கின்ற சொந்த வீட்டை அழகானதாகவும், வசீகரமானதாகவும், வசதியுள்ளதாகவும் வைத்துக் கொள்வதற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறீர்கள்!ஒரு சுவரொட்டியை அதன் சுவற்றில் ஒட்டி விட்டால் கூட உங்களுக்குக் கோபம் வந்து விடுகிறது . பின் ஒரு நாள் அதை விற்று விடுகிறீர்கள். அந்த வீடு, உங்களது பற்றுதலின் ஒரு பொருளாக இனிமேல் இருப்பதில்லை. அதில் ஒரு இடி விழுந்தால் கூட நீங்கள் பாதிக்கப் படுவதில்லை ! அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு சில நிலங்களை வாங்குகிறீர்கள். இப்போது உங்கள் பற்றுதல் அந்த நிலங்களின் மீது சென்று விடுகிறது. சில காலம் கழித்து அவற்றை விற்றுவிட்டு,அந்தப் பணத்தை வங்கியில் போடுகிறீர்கள்.இப்போது, உங்கள் பற்றுதல் அந்த வங்கிச் சேமிப்பின் மீது வளர ஆரம்பிக்கிறது. இப்போது உண்மையில் எது உங்களுடையது, நீங்கள் பற்றுவைப்பது எதன் மேல்? அது வீடோ,வயலோ,பணமோ அல்ல;அது புகழ்,வசதி,படாடோபம்,பேராசை- அதாவது உங்கள் மனதில் ஆசைகளாக உருவெடுத்து வந்த பொருட்களே இவை ! உண்மையில் நீங்கள் பற்று வைப்பது உங்கள் அஹங்காரத்தின் மீது தான்.மனதிலிருந்து காமம்,பேராசை,பொறாமை மற்றும் வெறுப்பை நீக்குவதற்கு,நீங்கள் ஒவ்வொருவரும் ஏதாவது சில ஆன்மீக சாதனைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.