azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 20 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 20 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

To have the mind fixed on God in one’s final moments, is not something that can be accomplished easily. It presupposes long training, and certain accomplishments. This is referred to as Purva samskara. The mind should have gone through a certain course of rigorous discipline. That alone is not enough; the mind must discard all other thoughts as low and inferior, even as defiling. This disgust towards all other objects should grow in strength. When these two – disciplining of the mind and an attitude of detachment to all other thoughts are present, concentration on the Divine will certainly emerge and be steady during the last moments.(Geetha Vahini, Ch 16.)
Master the Mind, Be a Master-Mind. - Baba
ஒருவரது இறுதித் தருணத்தில் மனதை இறைவன் பால் நிலை கொள்ளச் செய்வது என்பது அவ்வளவு சுலபமாக பெறக் கூடிய ஒன்றல்ல.அதற்கு முன்னரே நீண்ட பயிற்சியும் , குறிப்பிட்ட சாதனைகளை அடைந்திருப்பதும் அவசியமாகிறது. இது தான் '' பூர்வ ஸம்ஸ்காரம்'' என்று குறிப்பிடப் படுகிறது. மனம் ஒரு குறிப்பிட்ட தீவிர கட்டுப்பாட்டு வழிமுறையைக் கடைப் பிடித்திருக்க வேண்டும். அது மட்டும் போதாது;மனம் மற்ற எண்ணங்கள் யாவற்றையும் மட்டமானதாகவும் , கீழ்த்தரமானவை என்றும்,ஏன்,தீண்டத் தகாதவை எனவும் ஒதுக்கி இருக்க வேண்டும். இந்த பிற பொருட்களின் மீதான வெறுப்பு வலிமை உள்ளதாக வளர வேண்டும்.எப்போது இந்த இரண்டும்- மனதைக் கட்டுப்படுத்துவதும், பிற எல்லா எண்ணங்களின் மீதும் பற்றற்ற மனப் பாங்கும்- இருக்கிறதோ இறைவன் பால் மனக் குவிப்பு வெளிப்பட்டு,இறுதித் தருணத்தில் நிலையாக இருக்கும்.
மனதை வெல்லுங்கள், மாமனிதராகுங்கள் - பாபா