azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 18 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 18 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

In a beautiful flower garland, the quickest to strike the eyes are the flowers, while the thread upon which they are strung has to be inferred, it is not so patent. But without the connecting thread, they all fall off. So too, without that bond in Divine, you will fall off as entities unrelated to the rest of your fellow beings. Never forget that every one of you are beings with a Divine spark within. The Divine Current flows through and activates each of you. Learn to direct your mind, so that it helps you to recognize the Divinity in and around you. Be sure to wield this instrument of the mind, rather than yield to it. Understand the technique of its working as well as its potentialities.(Divine Discourse, Mar 27 1966.)
True education is that which develops in you love for your fellow-beings and motivates you to serve God in everyone. - Baba
ஒரு அழகான மலர் மாலையில், சட்டென்று கண்களைக் கவர்வது மலர்களே; அவை அனைத்தும் பின்னப்பட்டிருக்கும் நூல் அவ்வளவு வெளிப்படையாகத் தெரிவதில்லை; இருக்கிறது என்று ஊகிக்கப் பட வேண்டும்.ஆனால் அந்த இணைக்கும் நூல் இல்லாவிடில் அவை உதிர்ந்து விடும்.அதைப் போலவே, அந்த தெய்வீகத்தின் பிணைப்பு இல்லாவிடில், மற்றைய ஜீவ ராசிகளுடன் உறவின்றி நீங்கள் வீழ்ந்து விடுவீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உள்ளார்ந்த தெய்வீகக் கீற்றுள்ள ஜீவன்கள் என்பதை மறந்து விடாதீர்கள். தெய்வீகம் எனும் மின்சாரம் உங்களுக்குள் பாய்ந்து உங்கள் ஒவ்வொருவரையும் இயக்குகிறது. உங்களுக்குள்ளும்,உங்களைச் சுற்றியும் உள்ள தெய்வீகத்தை உணருவதற்கு உங்களுக்கு உதவி புரியும் வண்ணம், உங்கள் மனதை இயக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.இந்த மனம் என்னும் கருவியிடம் பணிந்து விடாமல், அதை நீங்கள் கையாளுவதில் உறுதியாக இருங்கள்.அது செயலாற்றும் யுக்தி மற்றும் அதன் திறன்களைப் புரிந்து கொள்ளுங்கள்.
உண்மையான கல்வி என்பது உங்களைச் சுற்றி இருப்பவர் மீது அன்பை வளர்த்து, ஒவ்வொருவர் உள்ளும் உறையும் இறைவனுக்கு சேவை செய்ய உங்களை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும் -பாபா