azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 15 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 15 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Most of you hear me say many things over and over again, year after year. But few take even the very first step in the spiritual path. You even take notes of my speeches, for purpose of reading them repeatedly. But, without practice, all of this is a sheer waste! You may talk in a flamboyant high-sounding style. Know that you are judged not by your tongue, but by your activity and attitude. There is no place for hypocrisy and double dealing in spirituality. Confidently, you must walk along the straight and narrow path, making Truth and Love as your constant guides and companions(Divine Discourse, July 13, 1965)
Offer your virtues as flowers in the altar of God. Virtues spread beauty and fragrance. - Baba
உங்களில் பலர் நான் பல விஷயங்களைத் திரும்பத் திரும்ப வருடா வருடம் சொல்வதைப் பார்க்கிறீர்கள். ஆனால், ஆன்மிகப் பாதையில், முதன்முதல் படியைக் கூட மிகச்சிலரே எடுத்து வைக்கிறார்கள். நீங்கள் என்னுடைய சொற்பொழிவுகளைத் திரும்பத் திரும்பப் படிப்பதற்காகக் குறிப்புகள் கூட எடுத்து வைத்துக் கொள்கிறீர்கள். ஆனால் இவற்றை நடைமுறையில் கொண்டு வராவிட்டால், இவை அனைத்தும் வீணே! நீங்கள் பிரமாதமாக பகட்டாகப் பேசலாம். நீங்கள் உங்கள் நடத்தை மற்றும் மனப்பாங்கைப் பொறுத்துத்தான் கணிக்கப்படுகிறீர்களே அன்றி, உங்கள் பேச்சினால் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். போலித்தனத்திற்கும், இரட்டை வேடத்திற்கும் ஆன்மீகத்தில் இடம் கிடையாது. சத்தியம் மற்றும் அன்பை உங்களது நிரந்தர நண்பர்களாகக் கொண்டு, நேரான, வரையறுக்கப்பட்ட பாதையில் செல்லுங்கள்.
உங்களது நற்குணங்களை இறைவனது சன்னிதானத்தில் சமர்ப்பியுங்கள். நற்குணங்கள் சுந்தரத்தையும், சுகந்தத்தையும் பரப்புகின்றன - பாபா