azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 14 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 14 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

What in reality is this body? It is but the Atma (soul) encased in five Koshas or sheaths – Annamaya (sheath composed of food), Pranamaya (sheath composed of vitality), Manomaya (one composed of thought), Vijnanamaya (sheath of intelligence), and Aanandamaya (sheath of bliss). By understanding this truth and contemplating over it, one attains discrimination to recede from these sheaths to the inner, more real core. Thus, step by step, a spiritual aspirant abandons one sheath after another and is able to dissolve away all of them, to achieve the knowledge of his unity with Brahmam (Divinity).(Divine Discourse, July 13, 1965)
Joys and sorrows are the results of the mind’s involvement with the
transient and the trivial. - Baba
உண்மையில் இந்த உடல் என்பது என்ன ? இது ஐந்து கோசங்கள் அல்லது உறைகளுக்குள் -அதாவது அன்னமய ( உணவு), ப்ராணமய ( உயிர்மூச்சு), மனோமய (மனம்),விஞ்ஞானமய (புத்தி), ஆனந்தமய (ஆனந்தம்)- இருக்கும் ஆத்மாவே அன்றி வேறில்லை. இந்த உண்மையைப் புரிந்து கொண்டு , அதைப் பற்றி தியானிப்பதன் மூலம், ஒருவர் மேலும் மேலும் உள்நோக்கி இந்த உறைகளைத் தாண்டி பின் சென்று, உண்மையான உட்கருவை உணர்வதற்கான பகுத்தறிவைப் பெறுகிறார். இவ்வாறு படிப்படியாக,ஒரு ஆன்மீக சாதகர்,ஒவ்வொரு உறையையும் கைவிட்டு , இவை அனைத்தையும் கரைத்துத் தெளிந்து, தனக்கும் பரப்பரம்மத்திற்கும் உள்ள ஒற்றுமையைப் பற்றிய அறிவைப் பெறுகிறார்.
இன்பங்களும்,துன்பங்களும் நிலையற்ற மற்றும் அற்பமானவற்றில் மனம் கொள்ளும் ஈடுபாட்டின் விளைவுகளே - பாபா