azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 13 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 13 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

You fill your days with unremitting labour, immersed in perpetual anxiety and worry, you are busy beyond description, with no time to silently contemplate God’s handiwork. You are troubled by strange inexplicable misgivings and run helter-skelter after hollow comforts, blinded by hate and greed. Caught in this toil and turmoil, you sometimes lose the knowledge of the anchor that will save you - disciplining of the mind. Start this spiritual discipline as early as possible in life, do not postpone it any further. For, no one knows when the span of life will be brought to a close. Reflect on it. Knock and the doors of Grace will open. Open the door, the Sun’s rays waiting outside your door will flow silently in and flood your room with love and light.( Divine Discourse, Mar 27, 1966)
God's love descends equally on all people. A fragrant flower retains its fragrance whether you hold in the right hand or the left. - Baba
உங்களது நாட்களை இடையறாத உழைப்பால் நிரப்பி,நீங்காத கவலை மற்றும் தவிப்பில் ஆழ்ந்து, விவரிக்க முடியாத அளவு மும்முரமாக இருந்து கொண்டு, இறைவனது கை வண்ணத்தை அமைதியாக தியானிப்பதற்கு நேரம் இல்லாமல் இருக்கிறீர்கள். நீங்கள் வினோதமான,விவரிக்கமுடியாத அவநம்பிக்கைகளால் பாதிக்கப்பட்டு,வெறுப்பு மட்டும் பேராசையால், கண்மூடித்தனமாக, சூன்யமான சுகங்களுக்காக அலைந்து திரிகிறீர்கள். இந்த உழைப்பு மற்றும் கொந்தளிப்பில் மாட்டிக் கொண்டு, நீங்கள் சில சமயம் உங்களைக் காக்க வல்ல மனக்கட்டுப்பாடு என்ற நங்கூரத்தைப் பற்றிய அறிவை இழந்து விடுகிறீர்கள். இந்த ஆன்மீக சாதனையை உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு முன் கூட்டியே ஆரம்பிக்க முடியுமோ,ஆரம்பித்து விடுங்கள்; இதற்கு மேலும் தள்ளிப் போடாதீர்கள். ஏனெனில்,இந்த வாழ்க்கையின் முடிவு எப்போது வரும் என்று எவரும் அறியார்.இதைப் பற்றிச் சிந்தியுங்கள். தட்டுங்கள்; இறைவனது அருட்கதவுகள் திறக்கும்.கதவைத் திறங்கள், வாசலில் காத்து நிற்கும் சூரியனது கிரணங்கள் அமைதியாக உள்ளே நுழைந்து, உங்கள் அறையை அன்பாலும் அருள் ஒளியாலும் மூழ்கடித்து விடும்.
இறைவனது அன்பு அனைவர் மீதும் ஒரே அளவில் தான் பொழிகிறது. நீங்கள் அதை வலது கையில் பிடித்தாலும்,இடது கையில் பிடித்தாலும் ஒரு நறுமண மலர் தனது சுகந்தத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது - பாபா