azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 10 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 10 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

If your loyalty is towards your family, you are a servant of the family. If it is to God, you are a servant of God. But do not pay heed to the wages He gives. Do not argue and bargain for rewards. Only hired labourers clamour for wages and declare they are poor. Be a kinsman, a member of the family, a scion of God. Then, it behoves Him to maintain you in comfort. Try to live near God as His own kin. Do not calculate the number of hours you have spent in serving Him and lament that He has not compensated you enough. Be ever in joy, in His service, in doing good and being good.(Divine Discourse, Jul 13, 1965.)
When you offer every act of yours to God, your daily duties transform into worship. - Baba
உங்களது விசுவாசம் உங்கள் குடும்பத்தின் மீது இருந்தால்,நீங்கள் குடும்பத்தின் பணியாளரே.அதுவே இறைவன் பால் இருந்தால் நீங்கள் இறைவனின் பணியாளர் ஆகிறீர்கள்.ஆனால் அவன் தரும் கூலியைப் பற்றிக் கவனிக்காதீர்கள்.விவாதம் செய்து, வெகுமதிகளுக்காக பேரம் பேசாதீர்கள். கூலி வேலைக்காரர்கள் தான் சம்பளத்திற்காக அமளி செய்து,தாங்கள் ஏழைகள் என்று பறைசாற்றிக் கொள்வார்கள்.இறைவனின் உறவினராக,குடும்ப அங்கத்தினராக, அவனது வாரிசாக இருங்கள். பின், அவன் உங்களை சௌகரியமாக வைத்துக் கொள்வதற்குத் தகுதி உள்ளவராகி விடுகிறீர்கள். இறைவனுக்கு அருகாமையில் அவனது உறவினராக வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள். அவனுக்கு சேவை செய்த நேரத்தைக் கணக்கிட்டு,அவன் உங்களுக்குத் தேவையான அளவு ஈடு செய்யவில்லையே என்று புலம்பாதீர்கள். எப்போதும் நல்லதைச் செய்வதிலும்,நல்லவராக இருப்பதிலும், அவனுக்கு சேவை ஆற்றுவதிலும், மகிழ்ச்சியுடன் இருங்கள்.
உங்களது ஒவ்வொரு பணியையும் இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யும் போது, உங்களது அன்றாட கடமைகள் வழிபாடாக ஆகிவிடுகின்றன- பாபா