azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 09 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 09 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Aspirants, focus your yearning and efforts on the right goal - to be never born again. You may be born in a good family or in favourable circumstances; but subsequent Karma in this life, may not ensure a good death, one that will let you escape the cycle of birth and death. Every one born must have that end always in view. No tree will yield fruits the moment you plant the seedling in your backyard. To reach that stage, you have to foster it with care over a long period of time, is it not? Similarly whatever result you seek, you have to follow through carefully the preparatory disciplines, without any break. Cultivate good habits of thoughts and actions in order to make the end of your life genuinely auspicious.(Geetha Vahini, Ch 15.)
The greatness of human being lies in the fact that by conscious effort it is
possible to remove the evil in anyone. - Baba
ஆன்மீக சாதகர்களே !உங்களது தாபத்தையும்,முயற்சிகளையும் மீண்டும் பிறக்கவே கூடாது என்ற சரியான குறிக்கோளின் மீதே ஒருமுகப்படுத்துங்கள். நீங்கள் நல்ல குடும்பத்தில் அல்லது இசைவான சூழ்நிலையில் பிறந்திருக்கலாம்; ஆனால்,இந்த வாழ்வின் பிந்தைய கர்மாக்கள் பிறப்பு, இறப்பு என்ற சூழலிலிருந்து தப்பிக்க வைக்கும் நல்ல இறப்பை உறுதி செய்ய முடியாமல் போகலாம். பிறந்த ஒவ்வொருவரும் தங்களது முடிவை கவனத்தில் எப்போதும் கொள்ள வேண்டும்.உங்களது புழக்கடையில் செடியை நட்டவுடனேயே, எந்த மரமும் பழங்களைத் தர முடியாது.அந்த நிலைக்கு வர, பல காலம் அதைப் பேணிக் காக்க வேண்டும் அல்லவா?அதைப் போலவை, நீங்கள் நாடும் பலன்கள் எதுவாக இருந்தாலும்,கவனமாக தயாரிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை,இடைவிடாது நீங்கள் பின்பற்றியே ஆக வேண்டும். உங்களது வாழ்வின் முடிவு மங்களகரமானதாக இருப்பதற்கு, எண்ணங்கள் மற்றும் செயல்களில் நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொருவரிடமும் இருக்கும் தீய குணங்களை விடாமுயற்சியின் மூலம் நீக்கி விடமுடியும் என்பதே மனிதப் பிறவியின் சிறப்பு - பாபா