azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 07 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 07 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Faith is a slow growing plant. Concentration needs faith. Act according to your profession. Do not play false to yourself and to your ideals. To deny by your acts the truth of what you preach is a sign of cowardice and moral suicide. You say that God knows and sees everywhere, but you also do something wrong with the belief that God is elsewhere at that time. The most valuable message you must take from scriptures and sages is this: Carry on your legitimate duties, discharge your obligations, live up to your rights, but do not allow attachment to grow. Be like a trustee, so far as family, riches, reputation, knowledge and skills are concerned. Leave them gladly aside, when the call comes.(Divine Discourse, Mar 23, 196)
There is no nobler quality in the world than love. It is wisdom. It is righteousness.
It is wealth. It is Truth. - Baba
நம்பிக்கை என்பது வளரும் செடி போன்றது. மனக்குவிப்பிற்கு நம்பிக்கை அவசியம். உங்களது தொழிலிற்குத் தகுந்தவாறு நடந்து கொள்ளுங்கள்.உங்களுக்கும் உங்களது கொள்கைகளுக்கும் பொய்மையாக நடக்காதீர்கள்.நீங்கள் போதிப்பதின் சத்தியத்தை உங்கள் நடத்தையின் மூலம் மறுப்பது கோழைத்தனத்தின் அறிகுறி மற்றும் ஒழுக்கசீலத்தின் தற்கொலை போன்றதாகும்.இறைவன் அனைத்தும் அறிவான், அனைத்தையும் பார்க்கிறான் என்று கூறிக் கொண்டே, அந்த சமயத்தில் வேறு எங்கோ இருப்பான் என்று நம்பிக்கையில்,நீங்கள் சில தவறான செயல்களைச் செய்கிறீர்கள். வேதங்கள் மற்றும் முனிவர்களது உபதேசங்களிலிருந்து நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய மிக விலைமதிப்பற்ற உபதேசம் இதுதான் ;உங்களது நியாமான கடமைகளை ஆற்றுங்கள், உங்களது உரிமைகளுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுங்கள், ஆனால், பற்றுதல்கள் வளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பம், செல்வம், புகழ், மற்றும் திறமைகளைப் பொறுத்த அளவில் அவற்றின் அறக்கட்டையாளரைப் போல இருங்கள்.இறுதி அழைப்பு வரும்போது அவற்றை மகிழ்ச்சியுடன் விட்டுச் செல்லுங்கள்.
அன்பை விடச் சீரிய பண்பு இந்த உலகில் எதுவுமில்லை.அதுவே ஞானம்.அதுவே தர்மம். அதுவே செல்வம். அதுவே சத்தியம். -பாபா