azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 06 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 06 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Like a lighted lamp, God’s Grace spreads all round, on all who approach Him and love to be near Him. But if you interpose a shade which shuts out the light from you, if Grace does not shine, you have only yourself to blame. Open the doors of your heart and let the sunlight of God’s grace shine through and illumine all the corners and drive out the vices. To receive the desired programme on your radio set, you have to switch on and tune the receiver. That is an inescapable effort. Believe, strive and succeed - that is the message of the sacred texts.(Divine Discourse, Mar 23, 1966.)
When God is pleased with you, the whole world will be pleased with you. Therefore,
let all your efforts be towards pleasing God. - Baba
ஏற்றி வைக்கப் பட்டுள்ள தீபத்தைப் போல, இறைவனது அருள் எல்லா இடத்திலும், அவனை அணுகி, அவனது அருகாமையை விரும்பும் அனைவர் மீதும் பரவி இருக்கும். ஆனால் நீங்கள், ஒளியை உங்களுக்கு வராமல் தடுக்கும் ஒரு நிழலை குறுக்கே வைத்து விட்டு, இறை அருள் பிரகாசிக்கவில்லை என்றால், குறை உங்கள் மீது தான் இருக்கிறது. உங்களது இதயத்தின் கதவுகளைத் திறந்து வையுங்கள்; இறை அருள் எனும் சூரிய ஒளி அதில் நுழைந்து, எல்லா மூலைகளையும் ஒளி பெறச் செய்து, தீய குணங்களை விரட்டட்டும். உங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சியை ரேடியோவில் கேட்க வேண்டும் என்றால், அதைத் துவக்கி, தேவையான அலைவரிசைக்கு அதைக் கொண்டு செல்ல வேண்டும். இது ஒரு தவிர்க்க முடியாத செயல். நம்பி, முயன்று,வெற்றி அடையுங்கள்- இதுவே வேதங்களின் உபதேசம்.
இறைவன் உங்கள் மீது மகிழ்ச்சி அடைந்தால்,இந்த உலகனைத்தும் உங்கள் மீது மகிழ்ச்சி அடையும். எனவே உங்கள் அனைத்து முயற்சிகளும் இறைவனை மகிழ்ச்சி அடையச் செய்வதிலேயே இருக்கட்டும் - பாபா .