azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 05 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 05 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Parents have conferred this physical instrument called body, with which we can serve God in all living beings, glorify Him in and through Beauty and Truth, and attain the Absolute. This human body is essential to liberate ourselves from the direst of bondages. An iron box is essential to keep safe the precious gems. So too the body is essential to keep safe the gifts of faith, love and discrimination. God is immanent in the Universe. He is in the most distant star as well as the blade of grass under your feet. You can see Him, provided you curdle this Universe with discrimination, churn it with detachment and collect the nectar with earnestness. In the grain of the sand as well as in the grandest galaxy, God can be found by diligent and sincere spiritual practices. He is the core of every being, as butter is present in every drop of milk.(Divine Discourse, Mar 23, 1966.)
When you offer every act of yours to God, your work transforms into worship. - Baba
அனைத்து ஜீவராசிகளிலும் உறையும் இறைவனுக்கு சேவை செய்து,அவனை சத்தியம் மற்றும் சுந்தரமாகப் போற்றி, பரப்ரம்மத்தை அடைவதற்காகவே ,பெற்றோர்கள் இந்த மனித உடல் என்ற கருவியைத் தந்துள்ளார்கள். கொடிய பந்தங்களிலிருந்து, நம்மை விடுவித்துக் கொள்வதற்கு இந்த மனித உடல் அத்தியாவசியமானது.விலையுயர்ந்த நவரத்தினங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள ஒரு இரும்புப் பெட்டி தேவைப் படுகிறது. அதைப் போலவே, நம்பிக்கை, அன்பு மற்றும் பகுத்தறிவைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உடல் தேவை. இறைவன் இந்த பிரபஞ்சத்தில் உறைகிறான்.வெகு தொலைவில் உள்ள நக்ஷத்திரமானாலும் ,உங்கள் காலுக்கு அடியில் இருக்கும் புல்லானாலும் அவற்றில் அவன் உள்ளான். இந்தப் பிரபஞ்சத்தை, பகுத்தறிவு என்ற மோரால் உறையச் செய்து, பற்றின்மை என்ற மத்தால் கடைந்து, மிகுந்த ஆவலுடன் அமிர்தம் என்ற வெண்ணையை எடுத்தால்,நீங்கள் அவனைக் காண முடியும். மணலின் ஒரு சிறு துகளானாலும் ,மகத்தான விண்மீன் கூட்டமானாலும், உளமார்ந்த மற்றும் விடாமுயற்சியான ஆன்மீக சாதனைகளில் மூலம், அவற்றில் இறைவனைக் காண முடியும். பாலின் ஒவ்வொரு துளியிலும் உறையும் வெண்ணையைப் போல, ஒவ்வொரு ஜீவராசியின் உட்கரு அவனே.
நீங்கள் ஒவ்வொரு செயலையும் இறைவனுக்கு அற்பணம் செய்தீர்களானால், உங்கள் வேலையே வழிபாடாக மாறிவிடுகிறது- பாபா