azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 28 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 28 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

For food to taste good, you need to add salt to it. But only when you place a morsel of the food on your tongue you get to know if it has enough salt in it or not. So too only when you have moved about in the world and participated in its activities abiding by a moral code, you discover that, without the salt of jnana (wisdom), it does not taste good; if you take it with a pinch of this salt - the knowledge that you are not the body but the Indweller; that you are but the witness of the ever-changing panorama of Nature - then you will be happy and peaceful.(Divine Discourse, Apr 19, 1965.)
To the person who has completely surrendered, every day and every
event is a gift from God. - Baba
உணவு ருசியாக இருப்பதற்கு, நீங்கள் அதில் உப்பைச் சேர்க்க வேண்டும். ஆனால் ஒரு கவளம் உணவை உங்கள் நாவில் வைத்தால் தான், அதில் போதுமான அளவு உப்பு இருக்கிறதா, இல்லையா என்று உங்களுக்குத் தெரிய வரும். அதைப் போலவே,இந்த உலகில் அலைந்து திரிந்து, அதன் நிகழ்ச்சிகளில், ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி, பங்கேற்ற பின்னர்தான்,ஞானம் என்ற உப்பு இல்லா விட்டால்,அது சுவையாக இல்லை என்று கண்டு பிடிக்கிறீர்கள். நீங்கள் இந்த உடல் அல்ல, ஆனால் இதன் உள்ளுறைபவர்; சதா மாறிக் கொண்டு வரும் இயற்கை என்னும் பரந்த காட்சியைக் காணும் சாட்சியே நீங்கள் என்கிற இந்த அறிவாகிய உப்பின் ஒரு சிட்டிகையுடன் (உலக வாழ்க்கையை) நீங்கள் எடுத்துக் கொண்டால், அமைதியுடனும், ஆனந்தத்துடனும் இருப்பீர்கள்.
பரிபூரண சரணாகதி அடைந்த ஒருவருக்கு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிகழ்வும் இறைவன் அளிக்கும் பரிசாகும் - பாபா