azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 27 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 27 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The Divinity in each one prompts one to stick to truth and to the moral code; you only have to listen, obey and get saved. Few hear it the moment it whispers; some listen only when it protests loudly; others are deaf; and there are also some who are determined not to hear it. But all have to be guided by it, sooner or later. Some may ascend a plane, others may travel by car or board a bus; yet others may prefer a train journey, and there could be some who may like to trudge along - but all must reach the goal, some day or other. The sea of samsaara (worldly life) has to be crossed and all its waves transcended, with the help of the Divine Name. If you seek to know the highest and secure the award of the Lord, there can be no place for doubt. The heart should be set on achieving the task of realising the Lord within you as the Motivator.(Divine Discourse, Feb 10, 1963)
ஒவ்வொருவர் உள்ளும் இருக்கும் தெய்வீகம் ஒருவர் சத்தியத்தையும், ஒழுக்க நெறிகளையும் கடைப் பிடிக்கத் தூண்டுகிறது; நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அதைக் கேட்டு,பணிந்து காப்பாற்றப் படுவது ஒன்றுதான்.சிலர்அது மெதுவாகக் கூறியவுடனேயே கேட்டு விடுவார்கள்;சிலர் அது உரக்கக் கூச்சலிட்ட பிறகுதான் கேட்பார்கள்; மற்றவர்கள் எல்லாம் செவிடர்களே. மேலும் அதைக் கேட்கவே கூடாது என்று உறுதியாக இருக்கும் சிலர் கூட உள்ளனர். ஆனால் அனைவரும் இப்போதோ, அல்லது பின்னரோ அதனால் வழி நடத்தப் பட்டுத் தான் ஆக வேண்டும்.சிலர் ஆகாய விமானத்தில் ஏறிப் பறக்கலாம்; மற்றவர்கள் காரிலோ அல்லது பஸ்ஸிலோ பயணம் செய்யலாம்; வேறு சிலர் ட்ரெயினில் பயணம் செய்வதை விரும்பலாம்; மேலும் சிலர் நடந்தே செல்வதை விரும்பலாம்- ஆனால் அனைவரும் என்றோ ஒரு நாள் தங்களது இலக்கை அடைந்துதான் ஆக வேண்டும்.இறை நாமத்தின் உதவியோடு இந்த ஸம்ஸாரம் (உலக வாழ்க்கை) என்ற மஹா சாகரத்தின் அனைத்து அலைகளையும் மீறிக் கடந்தே ஆக வேண்டும். நீங்கள் மிக உயர்ந்ததான இறை அருளை அடைய விழைபவர்களாக இருந்தால் , சந்தேகத்திற்கே அங்கு எந்த இடமும் கொடுக்காதீர்கள்.நம்முள் இருந்து வழி நடத்துபவர் இறைவனே என்பதை உணர வேண்டும் என்ற பணியில் உங்கள் இதயத்தை நிலை கொள்ளச் செய்யுங்கள்.