azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 26 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 26 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

There is no scar on the sky, though clouds, stars, the sun and the moon all appear to streak across it. So too let a thousand ideas streak across the mind, ensure that your mind remains unaffected and serene. Get firm in mind; then, your reason also will not deviate. Without that equanimity or shanthi, you can get no soukhyam (happiness). Saint Kabir had no food for three days – but he thanked God for giving him the coveted chance of observing a ritual fast. The great devotee of Rama, Saint Ramadas was confined in prison – and he thanked God that he got a place where he could meditate on Him without disturbances. Such is the attitude of the saintly, those who are the beloved of the Lord. (Divine Discourse, May 23, 1965.)
Offer your virtues as flowers. Virtues spread beauty and fragrance. - Baba
மேகங்கள்,விண்மீன்கள்,சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவை வானத்தில் கடந்து சென்றாலும், அதில் தழும்புகள் இருப்பதில்லை. அதே போல, ஆயிரக்கணக்கான எண்ணங்கள் உங்கள் மனதில் கடந்து செல்லட்டும்;அது பாதிக்கப்படாமலும், தெளிவாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். மனதை உறுதியானதாக ஆக்கிக் கொள்ளுங்கள், பிறகு உங்களது புத்தியும் தடுமாறாமல் இருக்கும். அந்த சாந்தி இல்லை என்றால் உங்களுக்கு சௌக்கியமும் கிடைக்காது. கபீர்தாஸர் மூன்று நாட்கள் உணவு இன்றி இருந்தார்; ஆனால், ஒரு உபவாஸம் இருக்கக் கூடிய அரிய வாய்ப்பை அளித்தமைக்காக அவர் இறைவனுக்கு நன்றி கூறினார். ஸ்ரீ ராமரின் மிக உயர்ந்த பக்தரான பக்த ராமதாஸர் சிறையில் அடைக்கப் பட்டார்; அவர்,எந்த தொந்தரவும் இன்றி இறைவனை தியானிப்பதற்கான இடம் கிடைத்தமைக்காக இறைவனுக்கு நன்றி கூறினார். இறைவனுக்குப் பிடித்தமான, இறையருளாளர்களின் மனப்பாங்கு அப்படிப் பட்டதாகும்.
உங்களது நற்குணங்களை மலர்களாக இறைவனுக்கு அர்ப்பணியுங்கள்; அவை சுந்தரத்தையும்,சுகந்தத்தையும் பரப்புகின்றன . - பாபா