azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 22 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 22 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

It is want of faith that causes one to lose temper and fly into fits of anger; it is lack of faith in oneself and in others. If you really see yourself as the undefeatable Self (Atma) and others as reflections of yourself, as scriptures declare them to be, there can be no provocation to get angry. What you must resolve today, is to manifest your inherent Divinity more and more. Whatever else you may or may not do, do at least this: know the Lord that resides in you. Recognise Him, let Him manifest Himself in and through you. Fundamentally the fault lies in not understanding that this body and all things connected with it are impermanent.(Divine Discourse, May 23, 1965)
All are One, Be alike to Everyone. - Baba
நம்பிக்கை இல்லாமையே ஒருவர் பொறுமை இழந்து கோபத்தில் சீறி எழுவதற்குக் காரணம்; தன் மீதும் பிறரின் மீதும் நம்பிக்கை இல்லாமையே.வேதங்கள் பறைசாற்றுகின்றபடி, நீங்கள் உங்களை, தோல்வியே அற்ற ஆத்மாவாகவும், பிறரை உங்களது பிரதிபலிப்புக்களாகவும் உண்மையிலேயே பார்க்க ஆரம்பித்து விட்டால், கோபம் அடைவதற்கான தூண்டுதலுக்கு இடமே இருக்காது. உங்களுள் உறையும் தெய்வீகத்தை மேலும் மேலும் வெளிப்பட வைப்பேன் என்பது தான் நீங்கள் இன்று செய்ய வேண்டிய பிரதிக்ஞை. நீங்கள் எதைச் செய்கிறீர்களோ இல்லையோ,குறைந்த பட்சம் இதைச் செய்யுங்கள்; இறைவன் உங்களுள் உறைகிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவனை உணர்ந்து கொள்ளுங்கள்; அவன் உங்களுள்ளும்,உங்கள் மூலமாகவும் வெளிப்படட்டும். இந்த உடலும் அதனுடன் சம்பந்த பட்ட அனைத்தும் நிலையற்றவை என்பதைப் புரிந்து கொள்ளாமையே அடிப்படைத் தவறாகும்.
அனைவரும் ஒன்றே. அனைவருடனும் ஒன்று போலப் பழகுங்கள் - பாபா