azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 21 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 21 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

In the Geetha, Krishna said to Arjuna, "You are able to use the weapons of offence and defence in the battle and win because you were taught the art of handling them over many years from childhood, is it not? Could you have used them with confidence, without preparation, on the spur of the moment? Similarly, whatever else one may not meet during life, one is certain to meet with death. So all must be trained to have at that time, the attitude and thought that are most beneficial to them. Will it not be wise, therefore, to strive for the end, in your own best interest? Hence, take earnest steps to secure the thought of God, from early on. Whoever in the last moment of life, thinks of Me, attains Me.” Through the discipline of constant practice, avoid other thoughts and concentrate on the Lord alone. This is a certain way to reach God.(Geetha Vahini, Ch 15.)
One should think of God and offer prayers at least four times a day - at dawn, at noon, at sunset and before going to bed - as food for the soul. - Baba
பகவான் ஸ்ரீகிருஷ்ணர்,ஸ்ரீமத்பகவத்கீதையில் அர்ஜூனனிடம், '' தற்காத்துக் கொள்ள மற்றும் தாக்குதல் புரிய வல்ல ஆயுதங்களைப் பயன்படுத்தி,போரில் உன்னால் வெல்ல முடிகிறது ,ஏனெனில் இவற்றைக் கையாளும் கலையை சிறு வயதிலிருந்தே பல ஆண்டுகளாக, உனக்குப் போதிக்கப் பட்டதனால் அல்லவா?எந்த தயாரிப்பும் இன்றி, திடீரென்று ஒரு கணத்தில்,நம்பிக்கையுடன் உன்னால் இவற்றைப் பயன்படுத்தி இருக்க முடியுமா?அதைப் போலவே,ஒருவர் தனது வாழ்க்கையில் எதைச் சந்திக்கா விட்டாலும் இறப்பை கட்டாயம் சந்தித்துத்தான் ஆக வேண்டும். எனவே, அந்த இறுதித் தருணத்தில், அவர்களுக்கு மிகவும் பயனளிக் கூடிய மனநிலை,எண்ணம் ஆகியவை இருப்பதற்கான பயிற்சியை, அனைவருக்கும் கட்டாயம் அளித்தாக வேண்டும். எனவே, உங்கள் நலனைக் கருதி, இந்த இறுதி நிலைக்காக கடும் முயற்சி செய்வது புத்திசாலித்தனம் அல்லவா? எனவே, ஆரம்பத்திலிருந்தே இறை எண்ணத்தில் திளைத்திருப்பதற்கான, அக்கறையான நடவடிக்கைகளை மேற் கொள்ளுங்கள். எவரொருவர் தனது இறுதித் தருணத்தில் என்னை நினைக்கிறாரோ, அவர் என்னை அடைகிறார் '' என்று கூறுகிறார். இடையறாத பயிற்சி என்ற கட்டுப் பாட்டுடன், பிற எண்ணங்களைத் தவிர்த்து,இறைவன் மீது மட்டுமே கவனம் கொள்ளுங்கள். இதுவே இறைவனை அடைவதற்கான நிச்சயமான வழியாகும்.
ஒவ்வொருவரும் ஒரு நாளில் நான்கு முறையாவது,
- காலை,மதியம்,மாலை மற்றும் உறங்குவதற்கு முன்- ஆத்மாவிற்கு உணவு போல,இறைவனை நினைந்து பிரார்த்திக்க வேண்டும் - பாபா