azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 20 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 20 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The second is the very basic unit of Time which we measure, in what we designate as a year. Sixty seconds, make a minute, sixty minutes make an hour, twenty four hours constitute a day and thirty days make a month; twelve months pass and we say a year has passed! When twelve months are over, we come back again to the first in the list of months, and call it the New Year Day. We go on a spree to celebrate the occasion. Really speaking, nothing new has happened on the “New Year Day” - it is not the year, but every second that follows the present that is new. Hence, do not wait for the celebration of something new in Time, until minutes, hours, days, months and years add up! Celebrate the immediately succeeding second, and every one after it, through honest effort and attain everlasting joy. Do not waver in your determination to live in joy and peace.(Divine Discourse, Mar 23, 1966.)
Fullness in life is marked by the harmony of thought, word and deed. - Baba
ஒரு வருடம் என்று நாம் சொல்லும் போது, அதை அளக்கும் அடிப்படையான காலத்தின் அளவு வினாடியாகும். 60 விநாடிகள் ஒரு நிமிடம்,60 நிமிடங்கள் ஒரு மணி,24 மணி நேரம் ஒரு நாள்,30 நாள் ஒரு மாதம்; இவ்வாறு 12 மாதங்கள் கழிந்தால் ஒரு வருடம் ஆகி விட்டது என்கிறோம் ! 12 மாதங்கள் முடிந்தவுடன்,நாம் திரும்ப மாதங்களில் பட்டியலில் உள்ள முதல் மாதத்திற்கு வந்து,அதைப் புத்தாண்டு தினம் என்கிறோம். இதை விமரிசையாகக் கொண்டாட விழைகிறோம். உண்மையைச் சொன்னால், ''புத்தாண்டு தினத்தில்'' எதுவும் புதிதாக நிகழ்ந்து விடவில்லை; வருடம் புதிதல்ல, இப்போது இருக்கும் விநாடியை அடுத்து தொடர்ந்து வரும் ஒவ்வொரு விநாடியுமே புதியது தான். எனவே, காலத்தில், நிமிடங்கள், மணித்துளிகள்,நாட்கள்,மாதங்கள் மற்றும் வருடங்கள் என்று அடுக்கடுக்காகக் கூட்டிக் கொண்டே சென்று, புதிதாக ஏதோ ஒன்று வருவதைக் கொண்டாடுவதற்காகக் காத்திருக்காதீர்கள். அடுத்து வரும், மேலும் அதற்கு அடுத்து தொடர்ந்து வரும் ஒவ்வொரு விநாடியையும், நேர்மையான முயற்சியின் மூலம் கொண்டாடி, நிரந்தர ஆனந்தத்தைப் பெறுங்கள். ஆனந்தத்திலும் அமைதியிலும் வாழ வேண்டும் என்ற உங்களது உறுதியில் தடுமாறாது இருங்கள்.
எண்ணம்,சொல் மற்றும் செயலின் இசைவே வாழ்க்கையின் பூரணத்துவத்தைக் குறிக்கிறது. - பாபா