azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 19 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 19 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

It is good to attend discourses on the Geetha by learned scholars. However this is of no use if you lean on a pillar in the lecture hall and doze off. That is to say, it is not the sound, but the meaning that matters. It is not the ear, but the heart that must drink the nectar of Geetha and imbibe its essence. Seek and enjoy noble company (Sathsangam); but along with that, there also needs to be self-examination. Examine yourself to see how much you have succeeded in escaping from the senses, and getting close to God. The mind is like a wild elephant which can be tamed by the repetition of the Lord’s name. Do not feed it with conceit, envy, hatred and greed. Let the name of the Lord echo ever in the ear (Divine Discourse, May 22, 1965.)
Give no room for the ego. If anyone examines their position in this vast cosmos, they will realize their infinitesimal smallness. - Baba
கற்றறிந்த பண்டிதர்கள் வழங்கும் ,ஸ்ரீமத் பகவத் கீதையின் உபன்யாசங்களைக் கேட்பது நல்லதே. ஆனால், அந்த உபன்யாச மண்டபத்தின் ஒரு தூணில் சாய்ந்து கொண்டு உறங்குவதால்,ஒரு பயனும் இல்லை.அதாவது,வெறும் சத்தத்தால் எந்த பயனும் இல்லை, அதன் பொருளே முக்கியமானதாகும்.உங்கள் செவியல்ல,உங்கள் இதயம் ஸ்ரீமத் பகவத் கீதையின் அமிர்தத்தை அருந்தி,அதனது சாரத்தை உட்கொள்ள வேண்டும். ஸத்ஸங்கத்தை நாடி,அனுபவியுங்கள்; ஆனால் அதனுடன் கூடவே சுய பரிசோதனையும் அவசியமாகிறது. நீங்கள் எவ்வளவு தூரம் புலன்களிலிருந்து தப்பித்து,இறைவனது அருகாமையைப் பெற்றிருக்கிறீர்கள் என்பதை ஆய்வு செய்யுங்கள்.மனம் ஒரு மதம் கொண்ட யானை போன்றது;அதனை இறை நாமஸ்மரணையின் மூலம் அடக்கலாம். அதற்கு சூழ்ச்சி,பொறாமை,வெறுப்பு மற்றும் பேராசை என்ற தீனியைத் தராதீர்கள். இறைவனது நாமம் உங்களது செவிகளில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்.
அஹங்காரத்திற்கு இடமளிக்காதீர்கள். எவரும் இந்த பரந்த பிரபஞ்சத்தில் தங்களது நிலையை ஆராய்ந்தால், தாங்கள் எவ்வளவு மிக அற்பமான அளவு சிறியவர்கள் என்பதை உணர்வார்கள் - பாபா