azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 17 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 17 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Being blessed with the human form, you must strive to grow beyond the physical, mental and emotional bounds. With the help of the discriminating intellect, you must bring it to perfection, just like what a sculptor does to a crude stone. Be aware of your kinship with God; of the Divinity latent in you; of the immense potentiality within you. This can be attained by the exercise of discrimination and dispassion (Viveka and Vairaagya). No living form other than the human being is capable of this exercise. When you earnestly aspire, the Lord Himself will guide you from within through illumination, or through someone He will send. Do not despair in this journey; march bravely. Fill every moment with thoughts of God, in some form or other.(Divine Discourse, May 22, 1965)
To experience the proximity of the Divine, the easiest path is remembering
constantly the name of the Lord. - Baba
மனிதப்பிறவி என்ற அருளைப் பெற்றுள்ள, நீங்கள்.உடல்,மனம் மற்றும் உணர்ச்சிகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு உயர வேண்டும்.எவ்வாறு கரடுமுரடான கல்லை ஒரு சிற்பி பயன்படுத்துகின்றானோ,அதே போல , பகுத்தறியும் புத்தியைப் பயன்படுத்தி, , நீங்கள் மனிதப் பிறவியை பூர்ணத்துவம் அடையச் செய்ய வேண்டும். உங்களுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு; உங்களுள் உறையும் தெய்வீகம்; உங்களுள் இருக்கும் அளவற்ற திறன் ஆகியவை பற்றித் தெளிவாக இருங்கள். இதை விவேகம் மற்றும் வைராக்யத்தைப் பயன்படுத்தி அடையலாம். மனிதரைத் தவிர வேறு எந்த ஜீவராசிக்கும் இந்தத் திறன் கிடையாது. நீங்கள் ஆர்வத்துடன் நாடும்போது, உள்ளிருந்து அந்த இறைவனே ஒளியூட்டலின் மூலமோ அல்லது எவரையாவது அனுப்பியோ வழி நடத்துவான். இந்தப் பயணத்தில் மனம் தளராதீர்கள்; துணிவுடன் முன்னேறுங்கள்.ஏதோ ஒரு உருவத்தில் ஒவ்வொரு கணத்தையும் இறை எண்ணங்களால் நிரப்புங்கள்.
இறைவனின் அருகாமையை அனுபவிப்பதற்கு, நாமஸ்மரணையே மிகச் சுலபமான வழி- பாபா