azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 13 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 13 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

I ask you to fix your mind on any Name that brings up into your consciousness the glory and grace of the Lord. Also train your hands to do acts that serve the Lord Who is shining in every being. All men and women are Him. He shaves as the barber, makes clay as the potter, and washes, starches and irons clothes as the washerman. Know that He prompts, He inspires, He devises and He fulfils. Play your role as a puppet does; the unseen Director will unfold the drama that He has already willed. You take a sheet of paper on which My Form, as I am now, is printed; you fall to the ground before it as an act of reverence. Why cannot you then, revere all human beings, believing that I am in each of them, in an even clearer form?(Divine Discourse, Apr 26, 1965.)
Worship God in His manifestation as mankind. - BABA
இறைவனது பெருமையையும் கருணையையும் உங்களது மனச்சாட்சிக்குள் கொண்டு வரும் எந்த ஒரு இறை நாமத்தின் மீதாவது உங்கள் மனதை நிலை நிறுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.ஒவ்வொரு ஜீவராசிக்குள்ளும் ஒளிர்விடும் அந்த இறைவனுக்குச் சேவை செய்யும் வண்ணம் உங்கள் கரங்களுக்கு பயிற்சி அளியுங்கள். ஆண்,பெண் அனைவரும் அவனே. அவனே நாவிதனாக க்ஷவரம் செய்கிறான், குயவனாக மண் பாண்டத்தை உருவாக்குகிறான்,வண்ணானாக துணிகளைத் துவைத்து, கஞ்சி போட்டு, தேய்த்து மடிக்கிறான். தூண்டுபவனும் அவனே, ஊக்குவிப்பவனும் அவனே, திட்டம் இடுபவனும் அவனே, முடித்து வைப்பவனும் அவனே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு கைப்பொம்மையைப் போல உங்கள் பாத்திரத்தில் நடியுங்கள்: கண்களுக்குப் புலப்படாத அந்த இயக்குனர் அவன் ஸங்கல்பித்துள்ள நாடகத்தை அரங்கேற்றுவான். நான் இப்போது இருக்கின்ற மாதிரி உள்ள உருவத்தை அச்சடித்துள்ள ஒரு காகிதத்தை வைத்துக் கொள்கிறீர்கள்; அதன் முன் தரையில் விழுந்து, போற்றிப் பணிகிறீர்கள். பின்னர் ஏன் நான், இதை விட தெளிவான வடிவில் ஒவ்வொருவருள்ளும் உறைகிறேன் என்பதில் நம்பிக்கை கொண்டு, அனைத்து மாந்தரையும் போற்றிப் பணியக் கூடாது?
இறைவனே மனித குலமாக உரு எடுத்துள்ளதாக வழிபடுங்கள்- பாபா