azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 11 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 11 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Dive deep into your own Divinity. The crocodile is happy, unharmed and undefeatable, when it is in the depths of a lake or river. Once it sprawls on land, it becomes a plaything and an easy target. Remember this – the depths: they are your refuge, the source of your strength. Stay put there. Do not let your thoughts stray onto the shallows or the sands. Repetition of the Gayathri Manthra develops the dhee sakthi (Power of discrimination) and so its results will be giving up of evil company and the seeking of the company of noble souls. If satsang (good company) is not available, you can keep company with your own higher impulses and noble thoughts. When you establish yourself in the Divine Light, no worry, grief or pride can harm you.(Divine Discourse, Apr 26, 1965.)
If you can fill yourself with good thoughts in any situation, your life will be sanctified. - Baba
உங்களுக்கே உரித்தான தெய்வீகத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்தியுங்கள். முதலை நதி அல்லது ஏரியின் ஆழமான தண்ணீரில் இருக்கும்போது,சந்தோஷமாகவும்,பாதிக்கப் படாமலும் , வெல்லமுடியாததாகவும் இருக்கிறது. ஒருமுறை நிலத்திற்கு ஊர்ந்து வந்து விட்டால், ஒரு விளையாட்டு பொம்மை போலவும்,எளிதான இலக்காகவும், அது ஆகி விடுகிறது. நினைவில் கொள்ளுங்கள்- உங்களது அடைக்கலம்,உங்களது சக்தியின் ஆதாரம், உள்ளார்ந்த ஆழமே. அங்கேயே தங்கி இருங்கள். உங்களது எண்ணங்களை ஆழமற்ற இடங்களிலோ அல்லது மணற்பரப்பிலோ சிதற விடாதீர்கள்.காயத்ரி மந்திரத்தை திரும்பத் திரும்ப உச்சரிப்பது பகுத்தறிவை வளர்க்கும்; அதன் பலன்கள், தீய நட்புக்களை விடுத்து, ஆன்றோரின் நட்பைத் தேடுவதாக அமையும்.ஸத்ஸங்கம் கிடைக்கவில்லை என்றால்,உங்களது உயர்ந்த உணர்ச்சிகள் மற்றும் சீரிய எண்ணங்களுடன் நட்புணர்வை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.தெய்வீக ஒளியில் நீங்கள் நிலை கொண்டு விட்டால், கவலை, துயரம் அல்லது கர்வம் உங்களுக்குத் தீமை செய்ய இயலாது.
எந்த சந்தர்ப்பத்திலும் உங்களை நல்ல எண்ணங்களால் நிரப்பிக் கொண்டு விட்டீர்கள் என்றால்,உங்களது வாழ்க்கை புனிதமானதாகி விடும் - பாபா