azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 10 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 10 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Human beings, according to ancient Indian teachings, are not simply a coordinated collection of limbs, senses and sensations; they are all these put together, governed by the intelligence, that is sharpened by the modes and memories earned through many births. Intelligence and skills, by themselves are instruments with a limited range of efficiency; there are many goals which they cannot achieve. Those goals can most certainly be attained by the Grace of the Divine Power. Complete surrender of the ego to the Divine Will brings Grace upon you and fills you with bliss. In the epic Ramayana, Vibheeshana was capable of that surrender and so he was accepted very quickly and attained the joy from the Divine. On the other hand, Sugreeva took quite a while to reach that stage as he doubted the prowess of Lord Rama and only when his doubts were cleared, he truly surrendered to the Lord.(Divine Discourse, Mar 17, 1966)
The wise use the money, strength, intelligence, skills, aptitude bestowed on them as opportunities for helping others and making their lives happier. - Baba
நமது பண்டைய பாரதத்தின் உபதேசங்களின் படி மனிதர்கள் வெறும் அங்கங்கள், உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளின் ஒருங்கிணைந்த தொகுப்பு மட்டும் அல்ல;அவர்கள் இவை அனைத்தும் கலந்து, பல ஜன்மங்களின் ஈட்டிய வாஸனைகளால் தீட்டப்பட்ட புத்தியினால் நிர்வகிக்கப் படுபவர்கள். தனியாக புத்தியும்,திறமைகளும் மட்டும், ஒரு வரையறுக்கப் பட்ட அளவிலேயே திறன் கொண்டவை; அவைகளால் அடைய இயலாத குறிக்கோள்கள் பல உள்ளன. இந்த குறிக்கோள்களை இறை அருளால் கண்டிப்பாக அடையலாம். அஹங்காரத்தை பரிபூரணமாக இறைச்சித்தத்திற்கு சரணாகதி செய்வது உங்களுக்கு இறை அருளைத் தந்து உங்களை ஆனந்தத்தில் ஆழ்த்தும்.விபீஷணன் அத்தகைய சரணாகதியை செய்ய வல்லவனானதால், அவன் விரைவாக ஏற்றுக் கொள்ளப் பட்டு, இறைவனிடமிருந்து ஆனந்தத்தை அடைந்தான்.அதே சமயம் சுக்ரீவன் இந்த நிலையை அடைய அதிக காலம் பிடித்தது: ஏனெனில் ஸ்ரீராமரின் வல்லமையை அவன் சந்தேகித்தான்;அந்த சந்தேகங்கள் தீர்ந்த பிறகே, அவன் உண்மையில் இறைவனை சரணாகதி அடைந்தான்.
கூர்ந்த அறிவுள்ளவர்கள் தங்களுக்கு அளிக்கப் பட்ட செல்வம், வலிமை ,புத்தி, திறன்கள், சுபாவங்கள் அனைத்தையும் பிறருக்கு உதவி செய்து, அவர்களது வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக ஆக்குவதற்குக் கிட்டிய வாய்ப்புக்களாகப் பயன்படுத்துவர் - பாபா