azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 09 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 09 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The Sanathana Dharma (ancient Indian culture) calls upon you to revere the Acharya (Guru or preceptor), for the Guru is seeking to save you from disaster, from the floods of birth and death into which you are slipping, out of ignorance. Noble and venerable sages have struggled with and elevated themselves into the purer regions of thought, to discover their own inner reality. They felt the thrill and discovery and sang the freedom they gained. These songs and teachings serve as signposts and all who derive benefit therefrom must acknowledge the debt. The best way to do that is by studying, reflecting upon what is studied, practising the truths taught by them and proving them right, by your own experience. This is the best way to repay the Rishi Rna (debt to the sages).(Divine Discourse, Apr 26, 1965.)
Purity of mind is achieved by association with noble sages and studying
the writings of saintly persons. - Baba
ஸனாதன தர்மம் குருவை வணங்குமாறு பணிக்கிறது, ஏனெனில் குருவே , அறியாமையின் காரணமாக பிறப்பு, இறப்பு என்ற வெள்ளத்தில் விழவிருக்கும் உங்களை பேரழிவிலிருந்து காக்க விழைகிறார்.உயர்ந்த மரியாதைக்குரிய முனிவர்கள் போராடி, அவர்களது உண்மை நிலையைக் கண்டு பிடிக்கும் பொருட்டு , தூய்மையான எண்ணங்களின் நிலைக்கு தங்களை உயர்த்திக் கொண்டவர்கள். தங்களது கண்டு பிடிப்பின் வியப்பளிக்கும் உணர்வுகளை அனுபவித்து,அவர்கள் அடைந்த சுதந்திர உணர்வைப் பற்றி பாடியுள்ளனர். இந்த பாடல்களும் போதனைகளும் வழிகாட்டிகளைப் போல பயனளிக்கின்றன; இவற்றால் பயனடையும் அனைவரும், தங்களது நன்றிக்கடனை செலுத்தியே ஆக வேண்டும். இதைச் செய்வதற்கான சிறந்த வழி , அவற்றைப் படித்து, படித்தவற்றைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து,அவர்கள் போதித்த உண்மைகளை கடைப்பிடித்து,உங்களது சொந்த அனுபவத்தின் மூலம் அவை சரியானவை என்று நிரூபிப்பதே. முனிவர்களுக்கு நாம் பட்ட கடனைத் ( ரிஷி ருணம்) திரும்ப அளிக்க மிகச் சிறந்த வழி இதுவே.
மனத்தூய்மை என்பது உயர்ந்த ஆன்றோர்களுடன் பழகி ,புனித நல்லோரின் அறிவுரைகளைக் கற்று அறிவதனால் கிடைக்கிறது - பாபா