azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 06 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 06 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Let the petty wishes for which you now approach God be realized or not; let the plans for promotion and progress which you place before God, be fulfilled or not - these are not important in this journey of life. The primary aim for you should be to become Masters of yourselves. You must progress to hold intimate and constant communion with the Divine who is within you, as well as in the Universe you live in. Welcome disappointments and tests, for they toughen you and test your fortitude. For all who seek to cleanse the mind and climb upwards to the realm of spiritual bliss where 'this' and 'that' are discovered as one, the uninterrupted remembrance of the Divine Name is the most effective spiritual exercise.(Divine Discourse, Mar 16, 1966.)
When the heart is filled with good thoughts and feelings, all that comes out of the senses (your speech, your vision, your action) will be pure. - Baba
எந்த அற்பத்தனமான விருப்பங்களுக்காக நீங்கள் இறைவனை அணுகுகிறீர்களோ, அவை பூர்த்தி ஆகட்டும், ஆகாமல் போகட்டும்:இறைவன் முன் நீங்கள் கோரும் பதவி உயர்வு மற்றும் வளர்ச்சி கிடைக்கட்டும்,கிடைக்காமல் போகட்டும்:இவை எல்லாம் வாழ்க்கைப் பயணத்தில் முக்கியமானவை அல்ல.உங்கள் முதன்மையான குறிக்கோள், நீங்கள், உங்கள் மீதே ஆளுமை உள்ளவர்களாக ஆக வேண்டும். நீங்கள் வாழும் இந்த பிரபஞ்சம் அனைத்திலும் ,உங்களுள்ளும் உறையும் இறைவனுடன் தொடர்ந்த மற்றும் நெருக்கமான தோழமை வைத்திருப்பதில், நீங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். ஏமாற்றங்களுக்கும்,சோதனைகளுக்கும் வரவேற்பளியுங்கள், ஏனெனில் அவையே உங்களை வலிமைப் படுத்தி, உங்களது மனத்திண்மையை சோதிக்கின்றன.மனதைத் தூய்மைப் படுத்தி,''அதுவும் '' ,'' இதுவும்'' ஒன்றே எனக் கண்டு கொள்ள வைக்கும் ஆன்மீக ஆனந்தம் எனும் நிலைக்கு முன்னேற விழையும் அனைவருக்கும்,இறை நாமஸ்மரணையே மிகவும் பயன் நல்கும் பயிற்சியாகும்.
எப்போது இதயம் நல் எண்ணங்களாலும் உணர்வுகளாலும் நிரம்பி உள்ளதோ, புலன்கள் மூலம் வரும் அனைத்தும் ( உங்கள் வாக்கு, உங்கள் நோக்கு,உங்கள் செயல் ) தூய்மையானதாகவே இருக்கும் - பாபா