azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 04 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 04 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Do not merely boast of your knowledge of the scriptures and that you have read it a hundred times over and learnt by heart the commentaries so far written upon them. Reflect upon this fact - of all the millions that lived, why is it that Arjuna alone had the Vishwarupa Darshana (Vision of the Cosmic form)? It is because he had reached the highest stage of surrender. At the appropriate time, Krishna started the lessons on Bhagavad Gita and progressively, Arjuna’s surrender, yearning and unexcelled concentration grew. And then Arjuna was blessed with the universal manifestation of the Lord. Unless one attains that same degree of surrender and yearning, how can that result be expected? The cycle of birth and death cannot be got rid of by scholarship. Hence start with this first lesson. Cleanse your mind and journey to the realm where you see God in everyone, everywhere, at all times, through uninterrupted remembrance of your chosen Lord. This is the most effective spiritual practice.(Divine Discourse, Mar 16, 1966.)
It is a supreme virtue to forget one’s individual differences with others and move with all in a spirit of equality and harmony. - Baba
சாஸ்திரங்களில் உங்களுக்கு உள்ள அறிவைப் பற்றியும்,அவற்றை எப்படி நீங்கள் நூறு தடவைக்கு மேல் படித்து,அவற்றைப் பற்றி இது வரை எழுதப் பட்டுள்ள விளக்கவுரைகளை மனப்பாடமாக அறிவீர்கள் என்பதைப் பற்றியும் பெருமை அடித்துக் கொள்ளாதீர்கள். இந்த உண்மையைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள் - கோடானு கோடி மக்கள் இருந்த போதும், ஏன் அர்ஜூனனுக்கு மட்டும் விஸ்வரூப தரிசனம் கிடைத்தது ? அது ஏன் எனில், அவன் சரணாகதியின் மிக உயர்ந்த நிலையை எட்டியதனால் தான். சரியான நேரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீமத் பகவத்கீதையின் அறிவுரைகளை ஆரம்பித்தார்; படிப்படியாக அர்ஜூனனது சரணாகதி,தாபம் மற்றும் இணையற்ற மனக்குவிப்பு வளர்ந்தது. அதன் பின் அர்ஜூனனுக்கு இறைவனது உலகளாவிய விஸ்வரூப தரிசன பாக்கியம் கிட்டியது. ஒருவர் ,அதே அளவிலான சரணாகதியும்,தாபமும் பெறாதவரை, நற்பலன்கள் எவ்வாறு கிட்டும்? பிறப்பு,இறப்பு என்ற சூழலை புலமையினால் விட்டொழிக்க முடியாது. எனவே முதல் பாடத்திலிருந்து தொடங்குங்கள்.மனதைத் தூய்மைப் படுத்தி , நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இறை நாமஸ்மரணையின் மூலம் எங்கும், எப்போதும், எல்லோரிடமும் இறைவனைக் காணும் நிலைக்கு பயணம் செய்யுங்கள். இதுவே மிகவும் பயனளிக்கும் ஆன்மீக சாதனை.
பிறருடன் நமக்கு உள்ள வித்தியாசங்களை மறந்து , அனைவருடன் ஒன்று போலவும், இசைவுடனும் பழகுவதே தலை சிறந்த ஒழுக்கமாகும் - பாபா