azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 03 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 03 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Take time to introspect. The grief you cause to others will suffocate you after getting hardened to hatred. It will recoil on your own head with tenfold force. So avoid causing pain to others and be vigilant to not allow pain to yourself as well. Then you will attract the grace of God. You cannot be successful in your pursuit for Divinity if you contrive by tricks to cause harm to others, or revel in the misery of others, or concentrate only on your own happiness and progress, unmindful of the injury you cause to others. Dhanam (riches) and Daivam (Divinity) cannot be joint ideals. Darkness and Light cannot exist at the same time and in the same place.(Divine Discourse, Apr 10, 1965.)
உங்களையே உள் நோக்கி ஆராய்ந்து கொள்வதற்கு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிறருக்கு இழைக்கும் துன்பம்,வெறுப்பாக வலிமை அடைந்து உங்களையே திக்கு முக்காடச் செய்து விடும். அது பத்து மடங்கு வலுவுடன் உங்கள் தலையிலேயே திரும்ப அடிக்கும். எனவே பிறருக்கு துன்பம் விளைவிப்பதைத் தவிர்த்து விடுங்கள்;உங்களுக்கே துன்பம் ஏற்படாமலும் இருப்பதில் கவனமாக இருங்கள்.பின் நீங்கள் இறைவனது அருளை ஈர்த்து விடுவீர்கள். சூழ்ச்சிகளின் மூலம் பிறருக்கு தீங்கு விளைவித்தாலோ, பிறரது துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தாலும், பிறருக்கு நீங்கள் ஏற்படுத்தும் காயங்களைப் பற்றிக் கவலை கொள்ளாது, உங்களது சந்தோஷம் மற்றும் முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்தினாலும், உங்களது தெய்வீகத் தேடுதலில் நீங்கள் வெற்றி பெற முடியாது. தனமும் (செல்வம்), தெய்வீகமும், ஒன்றிணைந்த உயர் லட்சியங்களாக இருக்க முடியாது. இருளும் ,ஒளியும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இணைந்து இருக்க முடியாது.