azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 02 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 02 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

In the epic Ramayana, Ravana lent his ear to the pleasant eulogies from his ministers than the beneficial advice from his brother, Vibeeshana. By exiling his brother and honouring his courtiers, he sealed his own fate. Now many people are pursuing the pleasant over the beneficial and that is the reason for all distress and discontent. Indian Culture has always emphasised the hard and beneficial way; it has always advised the control of one’s senses. However people today follow cultures that cater to the senses and go after momentary and external frills and pleasures. Realize that the car is driven by steering the wheel inside, when this is turned, the outer wheels automatically move. Similarly when you turn the inner wheel, you can progress.(Divine Discourse, Mar 16, 1966.)
Righteous action and sense control are essential for the cultivation of universal love and goodness. - Baba
ராமாயண இதிகாசத்தில் ராவணன், தனது அமைச்சர்களின் இனிமையான புகழ்ச்சிகளுக்கு செவிமடுத்தானே அன்றி, அவனது சகோதரனான விபீஷணனின் நன்மை தரும் ஆலோசனைக்கு அல்ல. அவனது சகோதரனை நாடு கடத்தி விட்டு,அரச சபை ஆலோசகர்களுக்கு மதிப்பளித்ததன் மூலம் தனது அழிவைத் தானே தேடிக் கொண்டான். இன்று பலர் நன்மை பயப்பவற்றைவிடுத்து, இனிமையானவற்றையே தொடர்கின்றனர்; அனைத்து துன்பங்களுக்கும் அதிருப்திக்கும் இதுவே காரணம். பாரத கலாசாரம் எப்போதும் கடினமான ,நன்மை பயக்கும் வழியையே வலியுறுத்துகிறது; எப்போதும் ஒருவரது புலனடக்கத்தையே அது அறிவுறுத்தி வந்துள்ளது. ஆனால் மனிதர்கள் இன்று புலன்களுக்கு தீனி போடும் கலாசாரங்களையே பின்பற்றி, தாற்காலிகமான மற்றும் வெளிப்படையான பகட்டுகள் மற்றும் சுகங்களுக்காக அலைகின்றனர். எதைச் சுழற்றினால், வெளியில் இருக்கும் சக்கரங்கள் தானாகவே திரும்புமோ, அந்த உள்ளே இருக்கும் (ஸ்ட்டியரிங்) சக்கரத்தால் தான் ஒரு கார் செலுத்தப் படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதைப் போலவே , நீங்களும் உங்களுள் இருக்கும் ( ஆத்ம) சக்கரத்தைச் சுழற்றினால், நீங்கள் முன்னேற முடியும்.
தார்மீக செயல்கள் மற்றும் புலனடக்கம், பிரபஞ்ச மயமான அன்பையும் ,நல்லவற்றையும் வளர்த்துக் கொள்ளுவதற்கு அத்தியாவசியமானவை - பாபா