azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 31 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 31 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

All the variety in taste, colour, smell of the multiform food items, when considered fairly and squarely, are mere drugs to cure the illness of hunger; all the drinks that man has invented are but medications to alleviate the disease of thirst. Most people today suffer from an ailment of the senses and they try the quack remedies of recreation, pleasures, picnics, banquets, dances only to find that their fever has not subsided. This illness will subside only when the invisible virus is rendered ineffective and that will happen only when the rays of jnaana (wisdom) fall upon it. A true doctor interested in curing you of all illness, will advise what is hitha (beneficial) for you to restore your health, instead of that which is priya (pleasant); your Guru is such a doctor. Obey Him, even when His prescription is unpalatable, for your fever can be cured only by Him. Prefer the beneficial to the pleasant, for the pleasant might lead you down the sliding path into the bottomless pit. (Divine Discourse, Mar 16, 1966.)
The heart full of compassion is a temple of God. - Baba
பல வித சுவை, மணம், நிறம் மற்றும் வடிவம் கொண்ட வகை வகையான உணவு அனைத்தும். ஆழ்ந்து ஆராய்ந்தால் பசி என்ற நோயைத் தீர்க்கும் வெறும் மருந்துகளே; மனிதன் கண்டு பிடித்த அனைத்து பானங்களும் தாகம் என்ற நோயைத் தீர்க்கும் மருந்துகளே. இன்று அநேகமாக அனைத்து மனிதர்களும் புலன்களின் நோய்களினால் பாதிக்கப் பட்டு, போலி மருந்துகளான, கேளிக்கைகள்,இன்பங்கள்,சுற்றுலாக்கள், விருந்துகள் மற்றும் நடனங்கள் ஆகியவற்றை பயன் படுத்த முற்பட்டு,அவர்களது ஜூரம் குறைவதில்லை என்பதை உணருகின்றார்கள். இந்த நோய் கண்களுக்குப் புலப்படாத விஷக் கிருமியை செயலிழக்கச் செய்தால் தான் தணியும் ; அதுவும் ஞானத்தின் கதிர்கள் அதன் மேல் பட்டால் தான் நடக்கும். உங்களை குணப்படுத்துவதில் அக்கறை உள்ள ஒரு உண்மையான மருத்துவர்,உங்களுக்கு எது பயனளிக்குமோ அதை அறிவுறுத்துவாரே அன்றி, உங்களுக்கு எது இனிமையாக இருக்குமோ அதை அல்ல.; உங்கள் குருவே அத்தகைய மருத்துவர்.அவர் பரிந்துரைக்கும் மருந்து கசப்பானதாக இருந்தாலும் அவரைப் பணியுங்கள், ஏனெனில் உங்களது ஜூரத்தை அவர் ஒருவரே குணப்படுத்த முடியும். இனிமையானவற்றை விடுத்து பயனளிப்பதையே விரும்புங்கள், ஏனென்றால் இனிமையாகத் தோன்றுபவை உங்களை படுகுழியில் தள்ளி விடும் பாதைக்கு இட்டுச் செல்லக் கூடும்.
கருணை நிறைந்த உள்ளம் அதுவே கடவுள் வாழும் இல்லம் - பாபா